Sunday, September 15, 2019

தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 4.3 சதவீதம் ஆகக் குறைந்தது: மத்திய அரசு ஒப்புதல்

உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக தொழிற் துறை உற்பத்தி ஜூலை மாதத் தில் 4.3 சதவிகித மாகக் குறைந்து விட்டதாக, மத்திய அரசே தனது புள்ளிவிவர அறிக்கையில் ஒப்புக் கொண் டுள்ளது. மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கப் பிரிவு வெளியிட்ட அறிக்கை யில் இதுபற்றி மேலும் கூறப்பட்டிருப்ப தாவது: 2019 ஏப்ரல் - ஜூனில் தொழிற் துறை உற்பத்தி 3.3 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.
அதேபோல, கடந்த ஆண்டு ஜூலையில் 7 சத விகிதமாக இருந்த தொழிற் துறை உற்பத்தி வளர்ச்சி 2019 ஜூலையில் 4.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. காகிதம் மற் றும் காகித உற்பத்தித் தொழிற் சாலை, மோட்டார் வாகனங் கள், ட்ரெய்லர் மற்றும் செமி ட்ரெய்லர் வாகன உற்பத்திப் பிரிவு, பிரிண்டிங் மற்றும் ரெக்கார்டட் மீடியா, மறு உற்பத்தித் துறை ஆகியவற் றிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.