Wednesday, September 11, 2019

தலைமை நீதிபதி இடமாறுதலுக்கு எதிர்ப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் போராட்டம்



 
சென்னை, செப். 11- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில் ரமணி, மேகா லயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்தது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி விடுத்த கோரிக்கையையும், மூத்த நீதிபதி கள் குழு நிராகரித்தது.

இதையடுத்து வி.கே.தஹில் ரமணி பதவி விலகல் கடிதமளித் தார். இந்த தகவலை விருந்து நிகழ்ச் சியில் சக நீதிபதிகளிடம் அவர் கூறினார். உயர்நீதிமன்ற நீதிபதி கள், முடிவை பரிசீலிக்க கோரியும் அவர் ஏற்கவில்லை. தற்போது திங்கட்கிழமை முதல் அவர் உயர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. வழக் குகளையும் விசாரிக்கவில்லை.

தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியை பணியிட மாற்றிய முடிவை திரும்ப பெறவேண்டும் என்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி கள் குழுவுக்கு சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் சங்கம், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரை ஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத் தது.

இந்த கோரிக்கையை வலியு றுத்தி தமிழகம் முழுவதும் வழக் குரைஞர்கள் நேற்று நீதிமன்ற புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட் டனர். சென்னை உயர்நீதிமன்றத் தில், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும்பாலான வழக்குரைஞர்கள் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை.

இதனால், பல வழக்குகளின் விசாரணை வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் வழக்கு களின் விசாரணை பாதிக்கப்பட் டது.

போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள்

இதற்கிடையில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமை யில் நூற்றுக்கணக்கான வழக்கு ரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக் குரைஞர் சங்கத்தின் துணை தலை வர் சுதா, செயலாளர் கிருஷ்ண குமார், பெண் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் நளினி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்ட னர்.

தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதி மன்றத்துக்கு இடமாற்றம் செய்த முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் நீதிபதிக்கே நீதி இல்லையா? என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்த வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன் கூறியதாவது:-

தலைமை நீதிபதி தஹில் ரம ணியை மேகாலயா உயர்நீதிமன் றத்துக்கு இடமாறுதல் செய்தது மிகவும் வருத்தமாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் என்பது பாரம்பரியமான உயர்நீதிமன்றமா கும்.

75 நீதிபதி பணியிடங்களுடன், லட்சக்கணக்கான வழக்குகள் தாக் கலாகும் இந்த உயர்நீதிமன்றத்தில் இருந்து, தலைமை நீதிபதியுடன் சேர்த்து 3 நீதிபதிகள் கொண்ட மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்வது வருத் தமாகத்தான் உள்ளது. எனவே இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு மறுபரி சீலனை செய்ய வேண்டும்.

பெண் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் நளினி

பெண் வழக்குரைஞர்கள் சங் கத் தலைவர் நளினிகூறியதாவது:-

நீதிபதிகள் இடமாறுதல் நட வடிக்கை வெளிப்படைத்தன்மையு டன் இருக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தலைமை நீதி பதி தஹில் ரமணியின் இடமாறுதல் காரணம் தெளிவாக இல்லை.

சிறந்த நிர்வாகத்துக்காக என்று காரணம் கூறினால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தஹில்ரமணி ஏராளமான நிர்வாக சீதிருத்தங்களை செய்து உள்ளார்.

எனவே, சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் குழு ஒன்று விரைவில் டில்லி சென்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவில் இடம் பெற்றுள்ள நீதிபதி களை சந்தித்து முறையிட உள் ளோம்.

அதேநேரம், சுயமரியாதைக்காக தன் நீதிபதி பதவியையே தூக்கி வீசி தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியின் முடிவை கண்டு எங்க ளுக்கு பெருமையாக உள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.