Saturday, September 14, 2019

பறிபோகும் சுதந்திரம்: அச்சத்தில் லடாக் மக்கள்


லடாக் பிராந்தியம் காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிர தேசமாக அறிவிக்கப்பட்ட தொடக்க நாட்களில் அந்த மக்கள் மகிழ்ச் சியாக உணர்ந்தார்கள். ஆனால், தற்போது அவர்களின் மகிழ்ச்சி காணாமல் போய் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் தனித் தன்மை குறித்த கவலை தொற்றிக்கொண்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு அதிகாரச் சட்டம் 370 நடைமுறையில் இருந்ததால், லடாக்கில் அந்நியர்களோ அல்லது பெருமுதலாளிகளோ உள்நு ழைந்து தங்களின் லாப வேட்டை முதலீடுகளை மேற்கொள்ள முடிந்ததில்லை மற்றும் சொத்துக்களையும் வாங்க முடிந்ததில்லை.
ஆனால், தற்போதைய நிலையில் எதுவுமே தடையில்லை என்றாகிவிட்டது. அந்த மக்கள் ஒரு 6 மாதகாலம் சுற்றுலாவில் சம்பாதித்து,  அந்த ஆண்டின் அடுத்த 6 மாதங்களை ஓட்டிவிடுவார்கள். ஆனால், இனிமேல் பெருமுதலாளிகளின் வேட்டைக் காடாக லடாக் மாற்றப்படும்போது இவர்கள் தங்களின் சுயதொழில் வாய்ப்பை இழப்பார்கள்.
தங்களது நிலப்பகுதியில் இருந்து தங்களின் வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொண்டவர்களின்  நிலைமாறி இன்று, அந்நியர்களுக்கு வேலையாட்களாய் அன்றாட தேவைக்கு கூட அவர்களை எதிர் பார்க்கும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.
உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மலை மாநிலங்களின் வளங்களை தனியாருக்கு தாரைவார்த்த காரணத்தால் மருந்து நிறுவனங்கள், இதர கனிம வள சுரங்கங்கள் அதிகம் ஏற் பட்டது, சுயமாக தங்கள் உழைப்பில் வாழ்ந்துகொண்டு இருந்த இம் மாநில மக்கள் வெளியிலிருந்து வந்தவர்களின் நிறுவனங்களில் வேலை செய்து அன்றாட பிழைப்பை நடத்த வேண்டிய சூழல் அவர் களது மண்ணிலேயே உருவானது.
எனவே, சுற்றுலாப் பயணிகள் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால், எங்களின் நிலவளங்கள் மற்றும் நிர்வாகத்தை நாங்களே கவனித்துக் கொள்ளும் உரிமை வேண்டும் என்பதே அம்மக்களின் விருப்பம். எங்கள் மக்கள் மிகவும் எளிமையானவர்கள் அவர்களை சிதறடிக்க வேண்டாம் என்று லடாக் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.