Friday, September 13, 2019

ஜியோ ஆதிக்கத்தால் இருண்டு போகும் பி.எஸ்.என்.எல். எதிர்காலம்



மும்பை செப் 13 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5 ஜி சேவையை வழங் குவதற்கு தயாராகிக் கொண்டிருக் கின்றன. சொல்லப்போனால், 5 ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் போன்கள் சந்தையில் கிடைக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், இப்போதுதான் பிஸ்என்எல் நிறுவனம் 4 ஜி சேவைக்கான சோதனை ஓட் டத்தைத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் இந்த அரசு நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்டிக் கொண்டிருந் தது. ஆனால், இப்போது ரூ.13 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக் கிறது. இந்த கடன் சுமையின் மூலம் விரைவில் இந்த அரசு நிறுவனம் மூடப்படும் என்பது உறுதியாகிறது.

இந்த நெருக்கடி நிலை கடந்த 10 ஆண்டுகளில் தான் ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப்பின் என்றே கூறிவிட முடியும். என்ன தவறு நடக் கிறது? இந்த நிலையில் எதனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தனியாரி டம் செல்லும் என்ற கேள்விகளுக்கு நிதி நெருக்கடி என்ற ஒற்றை பதிலே முன் வைக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே தனது ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை வழங்குவதில் திணறி வருகிறது. குறிப்பாகக் கடந்த 3 மாதங்களாக ஊழியர்களுக்குச் சம்பளத்தை நாட்கள் கடந்தே வழங்கி வருகிறது. இந்த மாதம் பிறந்து 2 வாரங்கள் ஆகியும், இப்போதும் சம்பளம் வர வில்லை என அதன் ஊழியர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து பிஸ்எல்என்எல் நிறுவனத்தின் உயர் அதிகாரி  கூறு கையில், நிதி நெருக்கடியில் தவித்து வருகிறோம், நிலைமை குறித்துத் தொடர்ந்து பரிசீலித்து வருகிறோம் என்ற பதிலை மட்டுமே நிர்வாகம் எங்களுக்குகூறி வருகிறது. நாடு முழுவதும் எங்களின் சேவை வேண்டாம் என தொடர்ந்து பலர் சரண்டர் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் எதை நிர்வாகம் பரிசீலிக்கிறது என்பதே தெரியவில்லை. இக்கட்டான சூழலில் நாங்கள் சிக்கித் தவிக்கி றோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை என்றார் அவர்.

அதே வேளையில், அரசு கடந்த 3 மாதங்களாக ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்கவில்லை. அதாவது, இதர பிடித்தங்கள் போகக் கையில் வரும் சம்பளம் மட்டுமே ஊழியர்களிடம் கொடுக் கப்பட்டுள்ளது. பிஎப், கடன் தொகைக்கான பிடித்தம் போன்ற விஷயங்களை நிர்வாகம் கண்டுக் கொள்ளவில்லை.

பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டு மல்ல, ஜியோ வருகைக்குப்பின் ஒட்டுமொத்த தொலைத் தொடர் புத் துறையே வீழ்ச்சியைத்தான் சந்தித்து வருகிறது. சாத்தியமில்லாத சலுகைகளை வழங்கி வாடிக்கையா ளர்களை ஜியோ நிறுவனம் கைப் பற்றி வருகிறது. ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. வோடோ போன் அய்டியா நிறுவனங்கள் ஒன்றாக்கப்பட்டது. ஏர்டெல் சரிவில் உள்ளது. நாட்டில் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ வளர்ந்து வருகிறது என்றார்.

இந்த சூழலில் அரசு வங்கிகளி டம், பிஎஸ்என்எல் நிறுவன ஊழி யர்களுக்குச் சம்பளம் தர வேண்டும் எனக் கோடிட்டு, ரூ. 2,500 கோடி கடன் கேட்டுள்ளது. இதற்கு முன்னர், வங்கிகளிடம் ரூ. 800 கோடி கடன் கோரப்பட்டிருந்தது. இப்போது அரசு வங்கிகளிடம் கோரியுள்ள கடன் தொகையை வைத்து அதிக பட்சம் 6 மாதங்கள் வரை மட்டுமே நிறுவனத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள முடியும் எனச் சந்தை நிலவரங்கள் காட்டுகின்றன.

அரசு தொலைத்தொடர்புத் துறையில் முறையான திட்டங்களை செயல்படுத்தவில்லை. பிஎஸ்என் எலின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போது அரசுக்கு வங்கிகள் கடன் அளித் தாலும், பிஎஸ் என் எல் நிறுவனம் செயல்படத் தொடங்குமா என்பது கேள்விக்குறி தான்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.