Wednesday, September 11, 2019

பிறப்பால் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாம்!




கூறுகிறார்- மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா!!


ஜெய்ப்பூர், செப்.11 ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடாவில் அகில பிராமின் மகாசபா'' நிகழ்ச்சி ஒன்றில் தலைமையேற்று பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறும்போது, பார்ப்பனர்கள் சமூகத்தில் மிகவும் உயர்ந்த தகுதியைப் பெற்றுள் ளனர். இது பிறப்பால் வந்த தகுதி ஆகும். இது எளிதாக கிடைத்ததல்ல, பார்ப்பனர்களின் அளப் பரிய தியாகம், தவம் போன்றவற்றிற்கு கிடைத்த பரிசு ஆகும். இன்றும் பார்ப்பனர்கள் மிகவும் உயர்ந்த தகுதியைப் பெற்று அனைவருக்கும் தலை சிறந்த வழிகாட்டியாக உள்ளனர் என்று கூறினார்.  இதையே அவர் தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். மக்களவைத் தலைவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

“Brahmins have always had a high status in society. This status is a result of their sacrifice and dedication. This is the reason that Brahmins have always been the guiding light for society,” Birla said in a tweet in Hindi.''

Om Birla

ஜிக்கேஷ் மேவானி கண்டனம்

இது தொடர்பாக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறும் போது நாட்டின் முக்கிய பொறுப்பில் உள்ளவர், சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்தை வழிநடத்தும் ஒருவர் இவ்வாறு ஒரு ஜாதியை மட்டுமே உயர்த்தும் கருத்தை கூறுவது இன்றளவும் ஜாதிமனநிலையில் அவர் உள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.

இங்கு பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்றும் மட்டும் கூறவில்லை மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் அவர் மறைமுகமாகக் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சிற்கு கருத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். நமது அரசமைப்புச் சட்டத்தின் மேல் உறுதி கூறி பதவியேற்றவர் இப்படி ஒரு ஜாதிவெறியை ஊக்குவிக்கும் வித மாகப் பேசி அதை சமூக வலைதளங்களில் பெருமையுடன் பதிவிடுவது நமது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது'' என்று கூறினார்.

சமூக வலைதளத்தில், இவர் பதிவிட்ட உடன் பலர், இவர் உடனே பதவி விலகவேண்டும், இவ்வாறன மனநிலையில் உள்ள ஒருவர் எப்படி சபையை நடுநிலையுடன் நடத்துவார்? நாடாளு மன்ற அவையில் அனைத்து ஜாதியினரும் உள்ளனர். அப்படி என்றால் பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவருமே கீழானவர்கள் என்ற இவர் கூற்றின் படி பார்ப்பனர்கள் நினைத்துக் கொண்டால் மற்றவர்களை எப்படி மதிப்பார்கள்?'' என்று கூறியுள்ளனர்.

மக்களவைத் தலைவர்  ஓம் பிர்லாவின் சில சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள்:

தேசிய மொழியாம் இந்தி

நமது தேசிய மொழி இந்தி ஆகும். நாம் இருப்பது இந்தியா, இங்கே இந்தி மொழிதான் ஆதிக்கத்தில் உள்ளது. ஆனால், இன்றுவரை நம்மை அடிமை ஆக்கிய ஆங்கிலத்தில் தான் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு வந்தன. இந்த நிலை யில் சுதந்திரத்திற்குப் பிறகு நமது அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1952- ஆம் ஆண்டிற்குப் பிறகு எனது தலைமையில் முழுமை யாக இந்தியில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட் டுள்ளது, நமது தேசிய மொழிக்குப் பெருமை ஆகும்.

பாரபட்சம் காட்டிய பிறந்தநாள் வாழ்த்து

மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா தினசரி பிறந்த நாள் கொண்டாடும் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களின் பிறந்தாள் பட்டியலை வைத்து சமூக வலைதளங்கள் மூலம் பிறந்த நாள் வாழ்த்து கூறிவருகிறார். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, நல்லது தானே!

ஆனால், அவர் வாழ்த்துக் கூறியவர்களின் அதே பிறந்தநாளில் தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்களுக்கு வாழ்த்து கூற மறந்துவிடுகிறார்.  இதை அவரது சமூக வலை தளத்தில் அவரைத் தொடர்பவர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி கொண்டே இருந்தனர்.

இதனை அடுத்து முதல்முதலாக பாஜக புலந் சாகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போலா சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.