Saturday, September 21, 2019

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ‘மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது’

அமெரிக்க மனிதநேயர் சங்கம் வழங்குகிறது



அமெரிக்காவில் 75 ஆண்டுகளாக மனிதநேயத் திற்கு குரல் கொடுக்கிற, அறிவியல் மனப்பான்மை கொண்ட, அறம் சார்ந்த சுயநலமற்ற, பொதுநல நோக்குடைய அமைப்பு அமெரிக்க மனிதநேயர் சங்கம் (American Humanist Association).
இந்த அமைப்பின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ (Humanist Lifetime Achievement Award) வழங்கப்படவுள்ளது. அவரது சமூகநீதி மற்றும் சுயமரியாதை குறித்து மக்களிடம் 75 ஆண்டுகளுக்கு மேலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை அடை வதிலும், பெரியார் வழியில் மேற்கொண்டு ஆற்றிவரும் மனிதநேயத் தொண்டு களைப் பாராட்டி வழங்கப்படுகிறது.
இவ்விருது 1953ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருதினை ஆன்டன் ஜே கார்ல்சன் (Anton J. Carlson) பெற்றார். இவ்விருதினை ஜேம்ஸ் ரண்டி (James Randi), பால்கர்ட்ஸ் (Paul Kurtz) மற்றும் இர்னி சேம்பர்ஸ்  (Ernie Chambers) உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். 1996ஆம் ஆண்டு புகழ் பெற்ற உயிரியல் அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) பெற்றுள்ளார். இவ்விருதினைப் பெறும் முதல் இந்தியர் ஆசிரியர் கி.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்கா வாஷிங்டனில் இன்று (21.9.2019) தொடங்கி நாளை (22.9.2019)வரை இரண்டு நாள்கள்  பன்னாட்டு மனிதநேய - சுயமரியாதை மாநாடு நடை பெறுகிறது.
மாநாட்டின் இரண்டாம் நாளில் (22.9.2019) இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு (வாஷிங்டன் நேரப்படி காலை 9 மணி) இவ்விருது வழங்கப்படுகிறது. இவ் வமைப்பின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் விருதினை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளிலிருந்தும் மனிதநேய அமைப் பினர், பகுத்தறிவாளர்கள், அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இரண்டு நாள் மாநாட்டிலும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பல்வேறு பல் கலைக் கழகங்களின் மாண்பமை பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சமூகநீதி உணர்வாளர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து 50 பேராளர்கள் பங்கேற்கிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் தமிழர் தலை வருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக ஏராளமான திராவிடர் கழகத்தினரும் பொதுமக்களும் திரண்டு மகிழ்ச்சியோடு உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.