Saturday, September 14, 2019

மீண்டும் குப்பை நாடகம் தொடரும் மோடியின் நடிப்பில் மீண்டும் ஒரு காட்சி


தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நெகிழிகளைப் பிரித்தெடுக்கும் ஒரு நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். குளிரூட்டப்பட்ட அறையில் நடந்த இந்த குப்பை பிரித்தெடுக்கும் நாடகத்தில் மோடி மீண்டும் ஒரு முறை திறமையாக நடித்துத் தன்னு டைய திறமையை நிருபித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் மது ராவில் தூய்மை இந்தியா திட்டத் தின் ஒருபகுதியாக குப்பையிலிருந்து நெகிழிகளைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடும் பெண்களுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் கலந்துரையாடினார்.
பெண் தொழிலாளர்களுடன் அமர்ந்து, உதவி செய்வதாக பிரத மரின் சுட்டுரைப் பக்கத்தில் காணொ லியும் பகிரப்பட்டது. அந்தக் காணொலியைக் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், குப்பைகள் குவியலாக வைக்கப்பட்டிருந்த அந்த அறை முழுக்க முழுக்க பிரதமரின் இந்த நிகழ்ச்சிக்காக திரைப்படக் காட்சி அரங்கம் போல் பெரும் பொருட் செலவில் அமைக்கப்பட்டிருந்தது. எங்கிருந்தோ எடுத்து வந்து அங்கு வைக்கப்பட்ட குப்பைகளைத் தொழிலாளர்கள் பிரிப்பது போல பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பல முறை பல்வேறு பகுதிகளிலும் பா.ஜ.க-வினர் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டி, சுத்தம் செய்வது போல நடிப்பதையே தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் செய்து வருகின்றனர்.
குப்பை இல்லாத இடத்தில் குப்பைகளைக் கொட்டி, சுத்தம் செய்வது போல நாடு முழுவதும் பா.ஜ.க தலைவர்கள் நாடகமாடி வரும் நிலையில், 'தூய்மையே சேவை' திட்டத்திற்கும் அதே வழிமுறையைப் பின்பற்றியிருக்கிறார்  மோடி.
பின்னணியில் அரசு விளம் பரங்கள் இடம் பெற்றிருக்கும் குளி ரூட்டப்பட்ட அறையில் தரை விரிப் புகளின் மீது அமர்ந்து குப்பை களைப் பிரித்துக் கொண்டிருப்ப தாக காட்சிப் படுத்தப்பட்டிருப்பது பலரது விமர்சனத்தையும் சம்பாதித் துள்ளது. இதே போல் இந்த ஆண்டு அல காபாத் கும்பமேளாவின் போது தூய்மைத்தொழிலாளர்களின் கால்களைக் கழுவும் நாடகத்திற்கும் சுமார் ரூபாய் 15 லட்சம் வரை செலவு செய்து நவீன காமிராக்களைப் பொருத்திப் படம் பிடித்து விளம் பரப்படுத்தினார். மலக்குழி மரணங்கள் இன்ற ளவும் தொடர்ந்து வரும் சூழலில், தூய்மை இந்தியா என்கிற பெயரில், நாட்டு மக்களை ஏமாற்றும் வித மாகத் தொடர்ந்து திறம்பட பல நாடகங்களை சேவை என்ற பெயரில் மோடி நிகழ்த்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.