Sunday, September 22, 2019

ஹாங்காங்கில் 16ஆவது வாரமாக தீவிர போராட்டம்


ஹாங்காங் கில் அரசுக்கு எதிரான போராட்டம் 16-ஆவது வார மாக நேற்றும் தொடர்ந்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்த பின்னரும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வார இறுதி நாளான நேற்று ஹாங்காங்கின் பல்வேறு இடங்களில் ஏராளமானவர் கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு களை வீசியும், ரப்பர் தோட் டக்களால் சுட்டும் போராட் டக்காரர்களை அங்கிருந்து விரட்டினர். போராட்டக்கா ரர்களில் சிலரும் காவல்துறையினர் மீது கற்களை வீசினர். ஒரு பெட்ரோல் குண்டும் காவல் துறையினரை நோக்கி வீசப் பட்டது.
அரசுக் கட்டடமொன்றில் பறந்து கொண்டிருந்த சீன தேசியக் கொடியை போராட் டக் குழுவினர் கழற்றி எரித் தனர் என்று தகவல்கள் தெரி விக்கின்றன.
இதற்கிடையே, போராட் டக்காரர்களுக்கு எதிராக ஹாங்காங் காவல்துறையினர் அடக்குமுறையைக் கையாள்வதாக பன்னாட்டு மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.