Sunday, September 22, 2019

தமிழகத்தில் 2 தொகுதிகள் உட்பட 64 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்


அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன்களை தள்ளு படி செய்யக் கோரும் வழக்கில், அதற் கான பரிசீலனை ஏதும் இருக்கிறதா என்பது குறித்த தமிழக அரசின் எழுத்துப்பூர்வ வாதங்கள் அடங்கிய பதிலை நான்கு வாரங்களுக்குள் தாக் கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட் டது.
இந்த தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன், தமிழக அரசின் விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தில் முரண்பாடுகள் உள்ளன. அய்ந்து ஏக்கருக்கு மேல் சிறிது கூடுதலாக நிலம் வைத்திருக்கும் விவ சாயிகள் வறட்சி, வெள்ளம் உள் ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டபோதி லும், கடன் தள்ளுபடி நிவாரணத்தைப் பெற முடியவில்லை. அதேபோன்று, அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் 3 ஏக்கர் என குறைவான சாகு படி நிலத்தை விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தால் நிவாரணம் பெறும் நிலை உள்ளது. அதேவேளையில், அய்ந்து ஏக்கர் 2 சென்ட் நிலம் வைத் துள்ள விவசாயி சாகுபடி நிலத்தை குறிப்பிடாவிட்டால் நிவாரணம் பெற முடியாத நிலை உள்ளது. 2011 முதல் 2016 வரை தமிழகத்தில் வெள் ளம், புயல், வறட்சி போன்றவற்றால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்ட நிலையில், பயிர்க் கடன் தள்ளு படி திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று வாதிட்டார்.
அப்போது, நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகினால் அது வேறுதிசையில் செல்லும். கருணை அடிப்படையில் நிலைமையை நீதி மன்றம் கருத்தில் கொண்டு பார்க் கிறது. இது தொடர்பாக மாநில அரசு பரீசிலித்து பதில் அளிக்க வேண்டும் என்றார்.
தமிழக அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நட்ராஜ், மூத்த வழக்குரைஞர்கள் பாலாஜி சிறீநிவாசன், வினோத் கன்னா ஆகியோர் ஆஜராகி, பயிர்க் கடன் தள்ளுபடி என்பது அரசின் கொள்கை முடிவு விவகாரமாகும். நபார்டு வங்கி இது தொடர்பாக கொள்கையை வடிவமைத்துள்ளது. பயிர்க் கடன் திட்டம் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே பொருந் தும். அதன்படியே தள்ளுபடி அளிக் கப்பட்டுள்ளது. நிலம் அதிகமாக வைத்திருப்பதால் தள்ளுபடித் திட்ட வரம்பில் பெரு விவசாயிகள் வர வில்லை. சிறு, குறு விவசாயிகள் அதி கமாக இருப்பதால் அவர்கள் பயன் பெறும் நோக்கிலேயே இத்திட்டத்தை அரசு செயல்படுத்தியது என்றனர்.
அப்போது, நீதிபதி ஆர்.பானுமதி, இத்திட்டத்தில் அய்ந்து ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே பயன்பெறும் நிலை உள் ளது. அதைவிட சில செண்ட் நிலம் கூடுதலாக வைத்திருக்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தால் கூட பயன் பெறாத நிலை உள்ளது. உதாரணத்திற்கு தஞ்சாவூரில் 5 ஏக்கர் வளமான நிலத்தை வைத்திருந்து மூன்று போகம் விளைவிக்கும் விவ சாயிக்கு பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தில் பயன்பெறும் நிலையில், வறட்சி சார்ந்த தருமபுரி, சேலம் பகுதியில் 10 ஏக்கர் நிலம் வைத்திருக் கும் விவசாயிக்கு திட்டப் பலன் கிடைக்காத நிலை ஏற்படும்தானே? எனவே, உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அய்ந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வட்டித் தள்ளுபடி, அபராத வட்டித் தள்ளு படி போன்று ஏதாவது ஒரு பலன் அளிப்பது குறித்து தமிழக அரசு ஏதும் பரிசீலித்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், அது தொடர்பான விவரங்கள் ஏதும் இல்லை. இந்த விவகாரதத்தில் அர சின் நிதி நெருக்கடியும் சம்பந்தப் பட்டுள்ளது. அரசு நிதி ஆதாரங் களைக் கொண்டே கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது அரசின் கொள்கை விவகாரமாகும். ஆகவே, இதுதொடர்பான விவரங்களைப் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் வேண் டும் என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் மற்ற விவசாயி களுக்கும் பலன் கிடைப்பது தொடர் பாக தமிழக அரசின் பரிசீலனை குறித்த விவரங்கள், மத்தியப் பிரதே சம், ஆந்திரம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட் டுள்ள திட்டங்களின் புள்ளி விவரங் கள் ஆகியவை அடங்கிய எழுத்துப் பூர்வ வாதங்களை நான்கு வாரங் களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசார ணையை அக்டோபர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.