Sunday, September 22, 2019

இந்திய தேசியம் என்றால் அது இந்து ராஷ்டிரம்தானாம்: விஷத்தைக் கக்குகிறார் அமித் ஷா

பாஜக-வைப் பொறுத்த வரை இந்திய தேசியம் - என்பது, இந்து ராஷ்டிரம்தான் என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, உண்மையைப் போட்டு உடைத்து உள்ளார்.
இதை ஆங்கிலத்திலோ மேற்கத் திய அறிவியல் மூலமாகவோ விளக்க முடியாது என்றும் அவர் கூறியுள் ளார்.
புதுடில்லியிலுள்ள ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில், தூக்குத் தண்டனைக்கு, எதிராக கூட்டம் நடத்தியதற்காக, மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமாரையும் மற்றும் அவரது நண்பர்களையும் தேசத் துரோகச் சட்டத்தில் பாஜக அரசு கைது செய்தது: இந்த கைதைக் கண்டித்துப் பேசியதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீதும் மோடி அரசு தேசத்துரோக வழக்கு தொடர்ந்தது.
அதைத் தொடர்ந்து தேசபக்தி' என்ற சொல்லை வைத்து, பலரையும் தேசத்துரோகிகள் ஆக்கும் முயற்சி யில் பாஜக இறங்கியது. இந்து மதத் தின் கற்பனை கடவுளான துர்க் கையை வைத்து உருவாக்கப்பட்ட காவிக் கொடி ஏந்திய பாரத் மாதா' என்ற உருவகத்தை வாழ்த்தி பாரத் மாதா கி ஜே' என்று சொல்லாதவர் கள் எல்லாருமே தேசத் துரோகிகள் என்றும் ஆர்எஸ்எஸ் - பாஜக உள் ளிட்ட சங் பரிவாரங்கள் கூறினர். பாரத் மாதா கி ஜே சொல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண் டும் என்றும் முழக்கமிட்டனர். சங்-பரிவாரத்தின் இத்தகைய பாசிச பிரச்சாரங்களுக்கு நாடு முழுவதும் இடதுசாரிகள், அறிவுஜீவிகள், மாணவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயின் வழிவந்த வர்கள், தேச பக்தி" என்று பேசுவதே மோசடியானது என்றும் சாடிய துடன், இதை எதிர்த்துப் போராட் டங்களையும் நடத்தினர்
ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத முறையில், பாஜக தங் களின் கொள்கையான (இந்து) தேசியத்தை விமர்சிப்பவர்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று பகிரங்கமான முறையில் பாசிஸ்ட்டுகளுக்கே உரிய வகையில் மிரட்டியுள்ளது. பாசிச கலாச்சாரத் தின். ஒரு பகுதியான தனி மனித வழிபாட்டை உயர்த்திப்பிடிக்கும் வகையில் கடவுள் இந்தியாவிற்கு அளித்த கொடைதான் மோடி என் றும். பிரச்சாரம் செய்யத் தொடங்கி யுள்ளனர். இதையே உறுதிப்படுத் தும் வகையில், அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக தலைவர் அமித்ஷா பத்திரிகையா ளர்களிடம் பேசுகையில், 'இந்திய தேசியம் என்பது இந்து ராஷ்டிரம் தான்' என்று கூறியுள்ளார்.
இந்திய தேசியம் என்ற சொல் வெளிப்படுத்தும் கருத்தை, ஆங்கில வார்த்தைகளின் மூலம் விளங்கிக் கொள்ள முடியாது; மேலும், சமயச் சார்பின்மை என்ற வார்த்தையும் இந்தியச் சூழலில் பொருந்தாது; சமயச் சார்பின்மை என்பது குழப் பத்தை ஏற்படுத்தும் வார்த்தை என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.