Wednesday, September 4, 2019

பொருளாதார வீழ்ச்சிக்கான அறிகுறி முக்கிய எட்டு துறைகள் உற்பத்தி குறைவு

முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி சென்ற ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு ஆகியவற்றின் உற்பத்தி வளர்ச்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு 2.9.2019 அன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்து உள்ளதாவது:
உரம், உருக்கு, சிமென்ட், நிலக்கரி, மின்சாரம், கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, சுத்திகரிப்பு பொருள் கள் ஆகிய எட்டு துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டு ஜூலையில் 7.3 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு ஜூலையில் அவற்றின் உற் பத்தி வளர்ச்சி 2.1 சதவீதமாக குறைந்துள்ளது. சுத்திகரிப்பு பொருள்கள், நிலக்கரி, இயற்கை எரிவாயு உற்பத்தி மதிப்பீட்டு மாதத்தில் பின்ன டைவை சந்தித்துள்ளது. அதேபோன்று, உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே 6.6 சதவீதம், 7.9 சதவீதம், 4.2 சதவீதம் என்ற அளவில் சரிந் துள்ளது.
இருப்பினும், கடந்தாண்டு ஜூலையில் 1.3 சதவீதமாக காணப்பட்ட உரத்துறையின் உற்பத்தி நடப்பாண்டில் 1.5 சதவீதம் என்ற அளவில் சற்று வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் எட்டு துறை களின் வளர்ச்சி விகிதம் 3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. கடந்தாண்டு இதே கால அளவில் காணப்பட்ட வளர்ச்சியான 5.9 சதவீதத்து டன் ஒப்பிடுகையில் இது பாதி அளவு குறைவாகும்.
எட்டு துறைகளின் உற் பத்தி வளர்ச்சி விகிதம் நடப் பாண்டு ஏப்ரல் மாதத்திலி ருந்து சரிவடைந்து வருகிறது. ஏப்ரலில் இதன் வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைந்தது. மேலும் இது,  மே மாதத்தில் 4.3 சதவீதமாகவும், ஜூன் மாதத்தில் 0.7 சதவீதமாகவும் சரிந்தது என மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.     தொழில் துறை உற்பத்தி குறியீட்டில் (அய்அய்பி), இந்த எட்டு நிறுவனங்களின் பங்களிப்பு 40.27 சதவீத அளவுக்குள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.