Monday, September 2, 2019

2ஆம் உலகப் போர்: போலந்திடம் மன்னிப்பு கேட்டது ஜெர்மனி


இரண்டாம் உலகப் போரின்போது தங்கள் நாட்டுப் படையினர் போலந்து மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு ஜெர்மனி மன்னிப்பு கோரியது.
அந்தப் போரின்போது, ஜெர்மனி படைகள் போலந்து நாட்டின் வீலுன் நகரில் குண்டுவீச்சு நடத்த ஆரம் பித்த 80-ஆவது ஆண்டு தினத் தையொட்டி அந்த நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெர்மனி அதிபர் ஃபிராங்க்-வால்ட்டர் ஸ்டீன்மீயர் இவ் வாறு மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து அந்த நிகழ்ச் சியில் அவர் பேசியதாவது: ஜெர்மனி படையினரால் பாதிக்கப்பட்ட அனைத்து போலந்து மக்களிடமும் நான் தலை வணங்கி மன் னிப்பு கோருகிறேன். போலந் தில் மனித குலத்துக்கு எதி ராக ஜெர்மனி படையினர் மிகப் பெரிய குற்றங்களை நிகழ்த்தினர். அய்ரோப்பா வில் நாஜிக்கள் நடத்திய கொடூரங்கள், ஜெர்மனி வர லாற்றில் அழியாத கறையாக இருக்கும் என்றார் அவர்.
இரண்டாம் உலகப் போரின்போது, நாஜி ஜெர் மனியின் தாக்குதலில் போலந்து தான் அதிகபட்ச இழப்பு களை சந்தித்ததாக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்ற னர். அந்தப் போரில் உலகம் முழுவதும் கொல்லப்பட்ட 5 கோடி பேரில், போலந்து மக்கள் மட்டும் சுமார் 60 லட்சம் பேர் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.