Monday, September 2, 2019

சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல் பட்டு வரும் 15 சுங்கச்சாவடிகளின் கட்டணம் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 46 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட் டில் உள்ளன. இவற்றில் உள்ள 15 சுங்கச்சாவடிகள் வழி யாக செல்லும் வாகனங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்ட தொகை யின் படி ரூ.5 முதல் 15 வரை அதிகமாக செலுத்த வேண்டும்.
இதன்படி 52 கி.மீ.க்குள் பயணிக்கும் கார், ஜீப், இலகு ரக வாகனங்களுக்கு ஒரு முறை சென்று வர ரூ.60 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதே போல் இலகு ரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்து ஆகிய வற்றுக்கு ரூ.95 கட்டணம் நிர்ண யிக்கப்பட்டு உள்ளது. பேருந் துகள் ரூ.195, கட்டு மானத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் ரூ.305 செலுத்த வேண்டும். இந்த கட்டண உயர்வானது, தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008 -இன்படி மாற்றியமைக் கப்பட்டு ள்ளதாகவும், கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.1) முதல் அமல்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன்படி, நல்லூர், பாளை யம், வைகுந்தம், எலியார்பத்தி, கொடை ரோடு, மேட்டுப்பட்டி, விக்கிரவாண்டி, பொன்னம் பலப்பட்டி, நத்தக்கரை, புதூர் பாண்டியபுரம், திருமாந்துரை, மணவாசி, வாழவந்தான் கோட்டை, வீரசோழபுரம், விஜ யமங்கலம் உள்ளிட்ட சுங்கச்சாவ டிகளில் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.