Thursday, September 19, 2019

'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' நாடகம் - ஒரு விமர்சனம்

*மயிலாடன்
'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற நாடகம் புரட்சிக்கவிஞர் - பாரதிதாசன் அவர் களால் எழுதப்பட்டதாகும்.
வரலாற்றில் ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டே வந்தி ருக்கிறது. ஆரியர்கள் பூதேவர்களாகவும், திரா விடர்கள் அசுரர்களாகவும், தஷ்யூக்களாகவும், இராட்சதர்களாகவும் சித்தரித்து இதிகாசங்களும், புராணங்களும் வேதங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்து மதக் கடவுள்களில் சிவன் அழித்தல் கடவுளாகவும், பிர்மா படைத்தல் கடவுளாகவும் மகா விஷ்ணு காத்தல் கடவுளாகவும் உரு வாக்கப்பட்டனர்.
இராமாயணத்தில்கூட மகா விஷ்ணுதான் இராமன் அவதாரம் எடுத்து அசுரர்களை வீழ்த்தினான் என்று சொல்லப்படவில்லையா?
அதே போல ஆரிய பார்ப்பனர் களைக் கடுமையாக எதிர்த்த இரணியனை - இரணியன் மகன் பிரகலாதனை மூளைச் சலவை செய்து, பெண் மூலம் மயக்கி ஆரியத்தின் வலையில் வீழச் செய்து, சூதாக இரணியனைப் பார்ப்பனர்கள் எப்படி கொன்றார்கள் என்பதுதான் புரட்சிக் கவிஞரின் 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' எனும் ஒப்பற்ற நாடகம். மகாவிஷ்ணு நரசிங்க அவதாரம் (சிங்கம்) எடுத்து இரணியனைக் கொன்றான் என்கிறது ஆரியப் புராணங்கள்.
இந்த நாடகம் 1934இல் புரட்சிக் கவிஞரால் எழுதப்பட்டது. முதன் முதலாக தந்தை பெரியார் தலைமையில் 9.9.1934 அன்று அரங்கேற்றப்பட்டது.  குத்தூசி குருசாமி இரணியனாகவும், கே.எம். பாலசுப்பிரமணியம் பிரகலாதனாகவும் வேடந் தரித்து நடித்தனர்.
இந்த நாடகம் சென்னையில் அருங் காட்சியகக் கலையரங்கத்தில் கடந்த 16.9.2019 அன்று மாலை வெளிப்படை அரங்க இயக்கத் தினரால் சிறப்பாக நடத்தப்பட்டது. (1971ஆம் ஆண்டில் சேலத்தில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டன்று இரவும் இதே நாடகம் நடத்தப்பட்டதும் உண்டு)
புதிய தலைமுறையினருக்கு இந்தப் பழைய நாடகம் ஈர்ப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்தது என்பது உண்மைதான்.
ஆனால் நாடகத்தைப் பார்த்தவர்கள் ஏமாற்றமே அடைவார்கள். அந்த நாடகத்தை ஒரு மணி 45 நிமிடத்திற்குச் சுருக்கி, இந்த நவீனத்திற்கு ஏற்றாற் போல யுக்திகளைக் கையாண்டு,  வெகு நேர்த்தியாக நேரம் சென்றதே தெரியவில்லை என்கிற அளவுக்கு நாடகத்தைச் சுவை குன்றா மலும், விறுவிறுப்பாகவும் நடத்திய பாங்கு போற்றத்தக்கது. அரங்கமே நிரம்பி வழியும் அளவுக்குக் கூடிய பார்வையாளர்கள் இடை இடையே கரஒலி எழுப்பி தங்கள் இரசனையை - உணர்வை வெளிப்படுத்திக் கொண்டனர்.
நாடகத்தில் பங்கு கொண்டோர்
நெறியாளுகை: சி. இராமசாமி, நிகழ்கலைத் துறை - புதுவைப் பல்கலைக்கழகம், அய்.டி.அய். - சிங்கப்பூர் முன்னாள் மாணவர்
இனப் பெரும்பான்மைவாதமும் புராண இதிகாசக் கதைகளின் அடிப்படையில் கட்டமைக் கப்படும் சமூகப் பண்பாடும் விரைந்து தமது மேலாதிக்கக் கொடுங்கரங்களைப் பரப்பும் நெருக் கடியான நிகழ்காலச் சூழலில் பாவேந்தர் பாரதி தாசனின் 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' நாடகம் நிகழ்த்தப்படவேண்டிய தேவை உணரப் படுகிறது. கொடிய அரக்கன் என்று அறியப்பட்ட இரணியனை தன்மானமும் இனப்பற்றும் மிகுந்த பெரும் வீரனாகச் சித்தரித்துள்ளார் புரட்சிக் கவிஞர். இத்தகைய சித்தரிப்பு தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்வை உயர்த்தும் வலிமை மிக்கது என்பதை உணர்ந்திருந்த தந்தை பெரியார் இந்நாடகத்தின் முதல் நிகழ்வினை தலைமை யேற்று 1934-இல் நடத்தினார், தானே பிரதியையும் அச்சேற்றினார். வரலாற்றிலும் தொன்மங்களிலும் ஆதிக்க / ஆளும் வர்க்கங்களால் வஞ்சிக்கப்பட்ட, எதிர்மறையான வர்களாக முத்திரை சாற்றப்பட்ட மாந்தர்களின் நியாயத்தைப் பேசுகிறது இந்த நாடகம். தமது சமூக, பண்பாட்டு, அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தக்கவைத்துக்கொள்ள ஆளும் வர்க்கங்கள் புரியும் துரோகங்கள், புரட் டுக்கள், மூளைச் சலவைகள், சூழ்ச்சிகள், கொலைகள் என இரணியனும் அவனது இனத்த வரும் எதிர்கொள்ளும் எல்லா நிகழ்வுகளும் இடம் மற்றும் கால எல்லைகளைக் கடந்து இன்றளவும் தொடர்ந்து கொண்டேதான் இருக் கின்றன. இந்த நாடகத்தின் சமகாலப் பொருத்தப் பாட்டையும்  பிரதியின் ஆழத்தில் காணக் கிடைக்கும் நுட்பமான அரசியல் பண்பாட்டு விமர்சனங்களையும் புதிய அரங்கப் பரிமாணத்தில் வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த நிகழ்த்துகை வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்: அ. அறிவழகன், பிரேம்நாத், சுதன், டெல்ஃபின், மாணிக்கம், பாபு, அனுஷா, நேதாஜி ஆகியோர்.
நாடக அமைப்பு  (Dramaturgy): த. விவே கானந்தராசா, ஒத்திகை ஒருங்கிணைப்பு: ரெஜின் ரோஸ், இசை ஒருங்கிணைப்பு: சமனராஜா, பாடகர்: சமணராஜா, பர்க்கஷன் (Percussion): விநாயகம், கிட்டார் (Guitar): ஆனந்தன் ராசு.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: சுதன், உடை, ஒப்பனை: அ. அறி வழகன், அரங்கப் பொருட்கள்: கார்த்தி, அறிவழகன், எழுத்தாக்கம்: கு. முருகானந்தன், மக்கள் தொடர்பு & நிர்வாகம்: ராஜா, சுரேஷ்.
தொடர்புக்கு: வெளிப்படை அரங்க இயக்கம், குருவிநத்தம், பாகூர், புதுச்சேரி. மின்னஞ்சல்: misaam.84@gmail.com
நாடகக் கலையில் முனைவர் பட்டங்களைப் பெற்றவர்கள் நாட கத் துறையில் பலதளங்களில் பணியாற்றிக் கொண்டு இருப்ப வர்கள் எல்லாம் இந்த நாடகத்தில் பங்கேற்று நடித்தனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
தமிழர் தலைவர் பாராட்டு
நாடகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், இயக்குநரையும், முக்கிய கதாபாத்திரங்களாக நடித்தவர்களையும் பலபடப் பாராட்டி, அவர் களுக்கெல்லாம் சால்வை அணிவித்து உற்சாகப் படுத்தினார்.
இந்தக் கால கட்டத்தில் இந்த நாடகம் மிகவும் தேவையானது என்றும், நாட்டின் பல பகுதி களிலும் அரங்கேற்றப்பட வேண்டும் என்றும், திராவிடர் கழகம் இதற்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கும் என்றும் தமிழர் தலைவர் பேசியது நாடகக் கலைஞர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது.
இராம ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகி றோம் என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. இந்த நேரத்தில் இரணியன் அல்லது இணையற்ற வீரன்நாடகம் என்பது மிகப் பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
பாகவதம்

இரணியன் சொல்லுவதை கேளுங்கள்!
பாகவதத்தில் இரணியன் கதையில் சொல்லப்படுவதாவது: இரணிய கசிபு சொல் லுகிறான்:
"ஓ தானவர்களே! இந்த விஷ்ணு வின் - சகாயத்தால், நமது எதிரிகளும் அற்பர் களுமான தேவர்கள் என் சகோதரனைக் கொன்றார்கள். அந்த மகா விஷ்ணு ஒரு பட்ச பாதகன், தந்திரக்காரன், சிறுவன் போல் தம்மைப் போற்றுகிறவன். இஷ்டம் போல் நடப்பவன். இப்படிப்பட்டவனான அந்த விஷ்ணுவை வெட்டி வீழ்த்தப் போகிறேன். விஷ்ணுவைக் கொன்றால் தேவர்களும், தேவர்களின் கூட் டமும் வேரற்ற மரம் போல் வீழ்ந்து விடுவார்கள். ஆதலால் நீங்கள் முதலில் பிராமணர்கள் இருக்கும் இடம் சென்று அவர்களது தபசு, யாகம்,வேதம் அத்யயனம், விரதம், தானம், முதலாகிய இவைகளைச் செய்பவர்களைக் கொல்லுங்கள்...
பிராமணர்களால் செய்யப்படும் அனுஷ் டானம் யாகம் மகாவிஷ்ணு இருப்பதற்குக் காரணமாயிருக்கிறது. ஆகையால் எந்த எந்த தேசத்தில் பிராமணர்கள் இருக்கிறார்களோ, எங்கெங்கு வேதாந்தியானம் செய்யப் படுகிறதோ எந்த தேசத்தின் வருணாச்சிரமத்திற்கு உரிய கர்மங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றதோ அந்த தேசத்திற்குச் சென்று அவர்களை அக்கினியை வைத்துக் கொளுத்துங்கள், நாசஞ் செய்யுங்கள், என்றான். உடனே தானவர்கள் சென்று பிராமணர்கள் இருக்கும் பட்டணங்கள், கிராமங்கள், ஆச்சிரமங்கள்... முதலிய அனைத்தையும் கொளுத்தினார்கள். சிலர் கோடாலியையும், மண்வெட்டிகளையும் எடுத்துப்போய் கோவில்களையும், பிரகாரங்களையும், கோபுரங்களையும் இடித்துத் தள்ளினார்கள். சிலர் கொள்ளிகளைக் கொண்டு வீடுகளை எரித்தார்கள். இதனால் தேவர்கள் மறைந்து சஞ்சரித்தார்கள் என்று பாகவதம் 7ஆவது ஸ்கந்தம். 2ஆவது அத்தியாயத்தில் 715, 716ஆவது பக்கங்களில் இருக்கின்றது.
இரணியன்

புவிப் பெண்ணாள் கழுத்தினிலே
புரளுகின்ற முத்துவடம் தென்னாடு!
எடுத்து மீட்டுகின்ற எழில் வீணை!
கவிக்கூட்டம் பாமாலை கட்டுகின்ற கலைச்சோலை!
காசினியோர் காணிக்கைக் கப்பங் கட்டிக்
குவிக்கின்ற கரம்போல இலங்கைத் தீவு!
செவிக்கினிய தேமதுரத் தமிழோசை
செகமெங்கும் தமிழ் வீரம் பரப்புகின்ற பழைய நாளில்...
இருமலையைத் தோளாகப் பெற்ற வீரன்
திருமலியும் தேகங்கொண்டோன்
திராவிடர்க்குத் தேனாய் - நிலவாய்த் -
தீந்தமிழ்க்கோர் படைக்கலனாய்த் திகழ்ந்த பெரியோன்!
போர் வாட்கள் உறங்குகின்ற உறைபோல மீசையுண்டு!
புவிமெச்ச வாழவேண்டும் தமிழ் நிலம் என்பதிலும் தணியாத ஆசை உண்டு
புல்லேந்திப் படையெடுத்த ஆரியரைக் கண்டு விட்டால்
குரலில் சிங்கத்தின் ஒசை உண்டு!
இந்தத் தரங்குன்றாத் தமிழனுக்குப்
பெற்றோர்கள் இட்ட பெயர் பெருந்தகை வேந்து!
இழிகுலத்தார் ஆரியர்கள் இட்ட பெயர் இரணியனாம்
- கலைஞர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.