Wednesday, September 11, 2019

சொல்லுங்கள், எந்த சமூகம் முன்னேறும்?




காட்சி 1:

நேற்று (10.9.2019) மதியம் கிரீன்வேஸ் சாலையில் இருந்து வில்லிவாக்கம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தேன். வள்ளுவர் கோட்டத்தின் அருகே கடலில் கரைப்பதற்காக விநாயகர் சிலைகளை எடுத்துக் கொண்டு சனாதனத்தால் "சூத்திரர்கள்" என்று பட்டம் சூட்டப்பட்ட இளைஞர்கள் கையில் காவிக்கொடி, தலையில் காவி ரிப்பன் சகிதமாக மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி சென்றனர். ஏறக்குறைய கால் மணி நேரம் நின்று கொண்டு இருந்தேன். சுமார் 100 வாகனங்கள் கடந்து சென்றன.  ஒரு வாகனத்தில் கூட பிராமின்' சமூகத்தைச் சார்ந்த ஒருவரைக் கூட காணவில்லை... பூசாரிகள் உள்பட....

காட்சி 2:

அதைத் தாண்டி 300 மீட்டர் தூரத்தில் உள்ள கிறிஸ்தவ பாதிரியார்களால் நடத்தப்படும் லயோலா கல்லூரி முன்னால் வெள்ளை வெளேர் நிறத்தில் ஏறக்குறைய 90% பிராமின் மற்றும் மார்வாடி இன மாணவர்கள் நின்று இருந்தார்கள்.

எதற்கு என்று வினவிய பொழுது எம்.பி.., வகுப்பிற்கு வந்திருப்பதாகக் கூறினார்கள்.

இப்பொழுது கூறுங்கள்

எந்த சமூகம் முன்னேறும்???

மூத்திர சட்டியோடு 95 வயதில் சுற்றி சமூக விடுதலை பெற்றுத் தந்த பெரியார், தன் விலா எலும்பை ஒடித்து பெற்றுத் தந்த விடுதலையை இந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் சனாதன வாதிகள் சில பல லட்சங்களை செலவழித்து, இந்த அப்பாவி இளைஞர்களை வளர்ச்சிப் பாதையில் செல்லவிடாமல் செய்வதை கண்டிப்பதா?

விளக்கின் வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு, அதை நம்பி நோக்கி சென்று தங்களின் வாழ்வை முடித்துக் கொள்ளும் விட்டில் பூச்சிகளான இந்த இளைஞர்களை நினைத்து வருத்தப்படுவதா?

மனம் வலிக்கிறது!

தகவல்: டாக்டர் சோம.இளங்கோவன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.