Friday, September 6, 2019

குடிநீர் வராவிட்டால் புகார் தெரிவிக்க வசதி

குடிநீர் வராவிட்டாலோ, நீரின் தரம் குறித்து சந்தேகம் இருந்தாலோ உடனடியாகப் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 556 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 9 மாநகராட்சிகள், 66 நகராட்சிகள், 347 பேரூராட்சிகள், 48 ஆயிரத்து 948 கிராம குடியிருப்புகள் மற்றும் 4.23 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். குடிநீர் எங்காவது வரவில்லை என்றாலோ அல்லது பகிர்மான குழாய்களில் கசிவோ அல்லது உடைப்போ ஏற்பட்டாலும், குடிநீர் தரம் குறித்து சந்தேகம் இருந்தாலும் அருகிலுள்ள அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளரிடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண் டும் என்று தனது செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.