Friday, September 6, 2019

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட செயல்பாட்டால் சென்னை பல்கலை.யில் உயர்கல்வி தொடர மாணவருக்கு அனுமதி மறுப்பு: மாணவர்கள் போராட்டம்


சென்னை பல்கலைக் கழகத்தில் 2018ஆம் ஆண்டு இதழியல் துறையில் பட்டம் பெற்றவர் கிருபா மோகன் என்ற மாணவர்.
இந்த ஆண்டு தத்துவவியல் துறை யில் ‘பவுத்தம்’ தொடர்பான முதுக லைப் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். இவர் இதழியல் துறையில் படிக்கும் போது, அம்பேத்கர் - பெரியார் வாச கர் வட்டத்தின் செயலாளர் ஆவார்.
தற்போது தத்துவவியல் துறையில் ஒரு மாதங்களாக வகுப்பு நடைபெற்ற நிலையில், அந்த துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி, கிருபா மோகனிடம் ”நீங்கள் முறை யாக எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் எனப்படும் தகுதிச் சான்றிதழை தர வில்லை. அதனால் உங்களின் சேர்க் கக்கோரி ரத்து செய்கின்றோம்” என்று கூறியுள்ளார். ஆனால் கிருபா மோகன் அதே கல்லூரியில் முதலில் படித்த காரணத்தால் எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் தேவையில்லை என்று வாதிட்டுள்ளார்.
இந்த பிரச்சினை கடந்த ஒரு மாத காலமாகவே நடைபெற்ற வண்ணம் தான் இருந்துள்ளது. கிருபா மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தன்னுடைய சேர்க்கை ரத்து செய் யப்பட்டதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்தும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தரப்பில் இருந்தும் தரப்பட்ட அழுத்தமே காரணம் என் றும் கூறியுள்ளார்.
கிருபா மோகன் தற்போது அம் பேத்கார் - பெரியார் வாசிப்பு வட்டத் தில் ஒரு உறுப்பினர் மட்டுமே. ஆனால் அவர் இளங்கலை படிக்கையில் அவ் வாசகர் வட்டத்தின் செயலாளராக பணியாற்றிய போது, பல்கலைக்கழகத் திற்கு தருண் விஜய் மற்றும் இல. கணேசன் வருகை புரிந்த போது போராட்டங்கள் நடத்தப்பட்டது. மாட்டுக்கறிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் மாணவர்க ளுடன் சேர்ந்து போராட்டம் செய் துள்ளார் கிருபா மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே பல்கலைக் கழகத்தின் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாற்றல் ஆகும் போது மாற் றுச் சான்றிதழ் தேவையில்லை. ப்ரொ விஷ்னல் சர்டிஃபிகேட் மட்டுமே போதும் என்று துறைத் தலைவர் கூறினார். ஆனால் ஆகஸ்ட் 29ஆம் தேதி என்னுடைய சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறிய தாக கிருபா மோகன் தெரிவித்து உள்ளார்.
விதிமுறைகளை முறையாக கிருபா மோகன் பின்பற்றவில்லை என பல்கலைக்கழகம் தரப்பு கூறுகி றது. இது குறித்து அந்த பல்கலைக்கழ கத்தின் துணை வேந்தர் பி. துரைசாமி குறிப்பிடுகையில்,
“கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் கிருபா மோகன் நிறைய போராட்டங்களில் கலந்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், இதழியல் துறையில் பட்ட மேற்படிப்பிற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். புதிய துறையில் சேர வேண்டும் என்றால் இதற்கு முன்பு படித்த துறையில் இருந்து முறையாக சான்றிதழ்களை பெற வேண்டும். ஆனால் அந்த நடைமுறைகள் எதையும் அவர் பின்பற்றாத காரணத்தால் அவரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். இவரை நீக்குவ தற்காக மேலிடத்தில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என் றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.