Thursday, September 12, 2019

6 ஆயிரம் மாணவர்கள் கல்வி உதவித் தொகையை இழக்கும் அபாயம்!


குறிப்பிட்ட காலத்திற்குள் விண் ணப்பங்களைத் தாக்கல் செய்ய இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 6,000 தமிழக மாணவர்கள் கல்வி உதவித் தொகையை இழக்கும் அபா யம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளேட்டின் 9.9.2019 இதழில் வெளியிடப்பட் டுள்ள சிறப்புச் செய்தியில் கூறப் பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் தேசிய தகுதி மற்றும் வழிகள் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு தகுதி யுடையவர்களாக அறிவிக்கப் பட்டுள்ள, 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாண வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அனுப்புவதில் பள்ளிகள் அலட்சியம் காட்டி வரு வதால் அவர்கள் உதவித் தொகையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு அவற்றை அனுப்பச் செய்வதற்கு பள்ளிகளை அறி வுறுத்த வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டு வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள மாணவர் களின் 350 பேரின் விண்ணப்பங்கள் மட் டுமே செப்டம்பர் 5ஆம் தேதி வரை இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் இந்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு செப் டம்பர் 30ஆம் தேதியை இறுதி நாளாக கெடு விதித்துள்ளார். அதற்குள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யத் தவறினால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி உதவித் தொகையை இழக்க நேரும்.
மத்திய அரசால் வழங்கப்படும் இந்தக் கல்வி உதவித்தொகை 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அரசு உதவி பெறும் பள்ளி களில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங் கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 15 லட்சத்துக்கு குறைவாக உள்ள பொருளாதார ரீதியில் நலிந்த பிரி வைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது வழங்கப் படும். இவர்களுடைய தகுதியைக் கண்டறிய இவர்களுக்கு மாநில அரசால் சோதனைத் தேர்வு நடத் தப்படும்.
கடந்த முறை இதற்காக நடத் தப்பட்ட தேர்வில் 1.5லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இவர் களில் 6,695 பேர் தகுதியுள்ளவர் களைத் தேர்ந் தெடுக்கப்பட்டனர். இவர்களில் பலர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள்.
"இந்தக் கல்வி உதவித்தொகை 'நீட்' போட்டித் தேர்வுக்கான தேர்வு உப கரணங்களை வாங்கு வதற்கு பயன்படுகிறது” என்று போரூர் அரசு பெண்கள் மேனி லைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தெரிவித் துள்ளார்.
இவ்வாறு "தி டைம்ஸ் ஆஃப் இந் தியா” ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.