Friday, September 13, 2019

ஜூலையில் குறைந்தது தொழில்துறை உற்பத்தி

புதுடில்லி, செப்.13 நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, ஜூலை மாதத்தில், 4.3 சதவீதமாக குறைந்துள்ளது.

தயாரிப்பு துறையின் மந்த நிலை காரணமாக, ஜூலை மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி சரிவு கண்டுள்ளது.இதுவே, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 6.5 சதவீதமாக இருந்தது.நடப்பு ஆண்டில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, ஜூன் மாதத்தில், 1.2 சதவீதமாகவும், 4.6 சதவீதமாக மே மாதத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 3.3 சதவீதமாக இருந்தது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், இதே காலகட்டத்தில், 5.4 சதவீதமாக இருந்தது.தயாரிப்பு துறையில், ஜூலை மாதத்தில், குறிப்பிடத்தக்க அளவில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இம் மாதத்தில் தயாரிப்பு துறை வளர்ச்சி, 4.2 சதவீதமாக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், 7 சதவீதமாக இருந்தது.

சுரங்க துறையை பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில் வளர்ச்சி, 4.9 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இது, 3.4 சதவீதமாக இருந்தது.

மின்சார உற்பத்தி துறையில் வளர்ச்சி 4.8 சதவீதமாக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டில், இதே ஜூலை மாதத்தில், 6.6 சதவீதமாக இருந்தது.

நுகர்வோர் சாதனங்கள் துறை வளர்ச்சி, மைனஸ் 2.7 சதவீதமாகவும், நுகர்வோர் சாரா சாதனங்கள் துறையின் வளர்ச்சி, 8.3 சதவீதமாகவும் மதிப்பீட்டு மாதத்தில் உள்ளது.ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்ட, 23 தொழில் துறைகளில், 13 துறைகளில் உற்பத்தி அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.