Wednesday, September 4, 2019

பாபர் மசூதிக்குள் இரவில் திருட்டுத்தனமாக இந்து ‘கடவுளர்’ சிலையை வைத்தனர் உச்சநீதிமன்றத்தில் வாதம்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதிக்குள், இந்துக் கடவுள் சிலையை, திட்டமிட்டு, கள்ளத் தனமாக வைத்தனர். அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்தனர்' என, முஸ்லிம் அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக் குரிய நிலம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, அய்ந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு தினமும் விசாரித்து வருகிறது.
விசாரணையின் 18ஆவது நாளான, நேற்று (3.9.2019) சன்னி வக்ப் வாரியம் மற்றும் முதலில் வழக்கைத் தொடர்ந்த, சித்திகி சார்பில், மூத்த வழக்குரைஞர் ராஜிவ் தவான் வாதிட்டதாவது:
கடந்த, 1949, டிசம்பர் 22 இரவில், பாபர் மசூதிக்குள், இந்துக் கடவுளின் சிலை வைக்கப்பட்டது.
அதிசயம் நிகழ்ந்து, அந்த சிலை அங்கு வரவில்லை; சிலையை, திட்ட மிட்டு, கள்ளத்தனமாக வைத்தனர். அதைத் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு, அந்த நிலம் முடக்கப் பட்டது. அங்கு எந்த மாற்றமும் செய்யக் கூடாது என, 1950இல் உத்தரவிடப்பட்டது. ஆனால், சில அரசு அதிகாரிகள், இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். குறிப் பாக, பைசாபாத் துணை ஆணைய ராக இருந்த, கே.கே. நாயர், இந்துக் களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும், சிலையை அகற்ற அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.அதற்கு முன்னதாக, தலைமைச் செயலருக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'அயோத்தியில் குறிப்பிட்ட நிலத் தில், மிகப் பெரிய இந்துக் கோவில் இருந்தது. அதை, 1528இல் பாபர் இடித்து மசூதி கட்டினார்' என, கூறியுள்ளார்.இவ்வாறு அதிகாரிகள் இந்துக்களுக்கு ஆதரவாக திட்ட மிட்டு செயல்பட்டனர். அதிகாரி நாயர், பின்னர் பாரதிய ஜன சங்கத்தின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார்.
அதுபோலவே, இடிக்கப்பட்ட கட்டடத்தில், இந்துக்கள் வழிபடும் கடவுள், மயில், தாமரை போன்ற வற்றின் உருவங்கள் இருந்ததாகக் கூறியுள்ளனர். எந்த மாற்றமும் செய்யக் கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், திட்டமிட்டு, இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட் டுள்ளன.
கடந்த, 1934இல் இருந்து, இந்த நிலத்தில் தொழுகை செய்வ தற்கு, முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக் கப்படவில்லை. இந்துக்களும், அதிகாரிகளும், முஸ்லிம்களை மிரட்டினர்.
இவ்வாறு அவர் கூறி னார். விசாரணை தொடர்கிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.