Friday, November 25, 2011

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை: நான்காம் ஆண்டு தொடக்க விழா!


சென்னை, நவ. 25-பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வெங்காயம் திரைப்பட இயக்குநர், அய்யப்ப னுக்கு மாலையிட்ட நண்பர் களைக் கண்டால், எப்ப வேடம் போட்டீர்கள், எப்பொழுது வேடத்தை கலைப்பீர்கள் என்று கேட்க வேண்டும் என்று நகைச் சுவையாக பேசினார்.

19.11.2011 அன்று மாலை 6.30 மணிக்கு பெரியார் திடலில் அமைந்துள்ள, அன்னை மணியம் மையார் அரங்கத்தில், பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவும், மகர ஜோதியின் மோசடிகளை அம்பலப்படுத்தும், மரணம் அய்யப்பா என்ற ஆவணப்பட வெளியீட்டு விழா வும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் மாநில பகுத்தறி வாளர் கழக பொதுச்செயலாளர் குமரேசன், தலைமையேற்க, மாநில பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தார். வெங்காயம் திரைப் படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். பகுத்தறி வாளர் கழக மாநில செயலாளர் (வெளிநாட்டுத் தொடர்பு) பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவ ரையும் வரவேற்றுப் பேசினார்.

மரணம் அய்யப்பா!


அவர் தமது வரவேற்புரையில், ஊடகத்துறையில், நமது தோழர் களுக்கு வழிகாட்டவும், ஊக்கு விக்கவும் வேண்டும் என்கிற எண்ணத்தோடு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்  நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், இந்த ஊடகத்துறையைத் தொடங்கி வைத்தார்கள். முதல்திரையிடலாக இயக்குநர் சோமீதரன் இயக்கிய எரியும் நினைவுகள் என்கிற ஆவணப்படம் திரையிடப் பட்டது.

இது யாழ்ப்பாண நூலக எரிப்பு பற்றியதாகும். அதன் தொடர்ச்சியாக இந்தத்துறை பல அரிய பணிகளை தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில், செயல்பட்டு வருகிறது. அந்தத் தொடர் பணிகளில் ஒன்றாக மகர ஜோதியின் மோசடிகளை தோலுரித்துக் காட்டுகின்ற வகை யில், மலையாளத்தில், கேரளா அறிவியல், பண்பாட்டு அறக் கட்டளை (Kerala Science & Cultural trust)  சார்பில், சஜீவ் அந்திக்காடு இயக்கிய சாமியோ சரணம் அய்யப்பா என்கிற ஆவணப்படம், தமிழாக்கம் செய்யப்பட்டு, மரணம் அய் யப்பா என்ற பெயரில் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் வெளியிடப்படுகிறது என்று தனது வரவேற்புரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் இயக்குநர் ராஜ்குமார் அவர்களுக்கு பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் குமரேசன் சால்வை அணி வித்தார். அதைத் தொடர்ந்து பெரியார் சாக்ரடீஸ் குடிஅரசு தொகுதியை அளித்து சிறப்பு செய்தார். பிறகு, மரணம் அய்யப்பா குறுந்தகட்டை இயக்குநர் ராஜ்குமார் வெளியிட, குமரேசன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து  பெரியார் சாக்ரடீஸ், வாசகர் வட்ட செயலாளர் சத்யநாராயண சிங், பொறியாளர் (பிஎஸ். என்.எல்.,) ஆறுமுகம் ஆகியோர் பெற்றுக்கொண்டு சிறப்பித்தனர்.

சம்பிரதாயங்கள் சரியா?

பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் (வெளிநாட்டுத் தொடர்பு) பெரியார் சாக்ரடீஸ் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரை மக்கள் இயக்குநர் என்றும் எதார்த்தமாக காட்சி அமைப் பதில் இயக்குநர் பாரதிராஜாவை போன்றவர் என்றும். சிறந்த பகுத்தறிவாளர், நிறைய படித்தவர் என்றும் குறிப்பிட்டுவிட்டு, 7 ஆம் அறிவு மூலிகை, மஞ்சள் பற்றி பேசுகிறது. எல்லாம் சரி. அவர் எல்ல புத்தகத்தையும் படித்தார். ஆனால், மஞ்சை வசந்தன் எழுதிய சம்பிரதாயங் கள் சரியா? என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அதை படிக்காமல் விட்டுவிட்டார். அதுதான் சிக்கல். அந்த சிக்கல் இயக்குநர் ராச்கு மாரிடம் இல்லை என்று பாராட்டி அறிமுகம் செய்து பேசினார்.

பிறகு தலைமையுரை ஆற்றிய குமரேசன் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாறி வரும், சூழ்நிலையைக்கேற்ப, பகுத்தறிவு பிரச்சாரத்தில் ஒரு புதிய பிரச்சார அணுகுமுறையாக இதை பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில் தொடங்கப் பட்டு, செயல்பட்டு வந்திருக் கிறது. காரணம், இந்த ஊடகம் மக்ளை பெருமளவு ஈர்த்துள்ளது.

ஊடகப்பயிற்சி

ஆகவே, நமது பிரச்சார அணுகு முறையும் மாறவேண்டி யது. அவசியம்.  ஆகவே, மக்களின் எதிர்பார்ப்புக்கேற்றவாறு நமது பிரச்சார முறையும் மாற வேண்டிய தேவை இருக்கின்றது. ஆகவே, இதில் ஆர்வமுள்ள தோழர்களுக்கு இது குறித்த ஒரு பயிற்சி கொடுக்க வேண்டும். அந்தப் பொறுப்பை பகுத்தறிவா ளர் கழகம் ஏற்றுக்கொள்ளும் என்று பலத்த கைதட்டலுக் கிடையே அறிவித்தார்.

ஆபத்தானவன் அய்யப்பன்

நிறைவாக, இயக்குநர் ராச்கு மார் தனது சிறப்புரையில் இந்த மரணம் அய்யப்பா சரியான தருணத்தில் வெளியிடப்பட்டி ருக்கிறது. இருந்தாலும் மற்ற கடவுள்களை எல்லாம்விட, கொஞ்சம் ஆபத்தானவன். இந்த அய்யப்பன் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம், மற்ற கடவுள்கள் எல்லாம் வெறும் ஆன்மிகத்தை மட்டுமே திணிப்ப வையாக இருந்தாலும், இந்த அய்யப்பன் ஆன்மிகத்தோடு ஆணாதிக்கத்தையும் சேர்ந்து திணிக்கின்ற கடவுளாக இருக் கிறான். (கைதட்டல்.)

பெண்கள் அந்தக் கோயி லுக்குச் செல்ல முடியாது.அதிலும் போனமாதம் வரை அவனை அந்த நாய்கூட மதித்திருக்காது. ஆனா, அந்த வேடத்தை போட்டுட்டு வந்துட்டா அவன் பெண்டாட்டி, அவனை சாமின்னு கும்பிடணும். இவையெல்லாம் திட்டமிட்டு கடவுள் பெயரில் பரப்படுகின்ற ஆணாதிக்கச் சிந்தனைகள். இந்தத் தருணத்தில் மரணம் அய்யப்பா வெளியிட்டிப்பது மிகுந்த ஆறுதலை கொடுத்திருக்கிறது. இது கருப்புச்சட்டைக்காரர் களுக்காக தயாரிக்கப்பட்ட படம் அல்ல. கருப்பு வேட்டிக்காரர் களுக்காக தயாரிக்கப்பட்ட படம் (கைதட்டல்).

இது எல்லா கருப்பு வேட்டிக் காரர்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்று கூறும் போது தான். அய்யப்பனுக்கு மாலை போட்டவர்களை எப்போது வேடம் போட்டீர்கள் எப்போது வேடத்தை கலைக்கப் போகி றீர்கள் என்று அனைவரும் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து சிறப்புரையை நிறைவு செய்து விடைபெற்று சென்றார்.

சிறந்த இயக்குநர்

நாளை (20.11.2011) பரமத்தி வேலூரில் சிறந்த இயக்குநர் பட்டம் பெற இருக்கின்ற இந்த தருணத் திலும் இந்த நிகழ்ச்சி, அவர் தனது பயண நேரத்தை மாற்றி அமைத் துக்கொண்டு வருகை தந்து சிறப்பித்தது குறிப் பிடத்தக்கது. சிறப்புரையைத் தொடர்ந்து, மரணம் அயய்ப்பா ஆவணப்படம் திரையிடப் பட்டது.

பெரியார் திரை

இறுதியாக, நன்றியுரை ஆற்றிய உடுமலை வடிவேல் கடந்த மூன் றாண்டுகளில், பெரியார் சுய மரியாதை ஊடகத்துறையின் மூலமாக, 35 திரையிடல்கள் நடந்திருக்கின்றன என்றும், அதில் 50 குறும்படங்களும், 13 ஆவணப் பபடங்களும் திரையிடப்பட்டது என்றும், பெரியார் திடல் தவிர, வடசென்னை, குற்றாலம், மதுரை, பொன்னமராவதி, காரைக்குடி, காட்டங்குளத்தூர் ஆகிய இடங்களில் திரையிடல்கள் நடை பெற்றுள்ளன என்றும்,

இந்த அமைப்பின் இன்னொரு பரி ணாம வளர்ச்சியாக பெரியார் திரை எனும் பெயரில் ஆண்டு தோறும் பகுத்தறிவு குறும்படப் போட்டி திருவிழா நடத்தப் பெற்று கடந்த இரண்டாண்டு களாக ரூ.10,000, ரூ.5,000 ரூ.3000 மற்றும் ரூ.1000 தலா முதல், இரண்டு, மூன்று, சிறப்புப் பரிசு என்றும் இவை தவிர, சிறப்பு பரிசுகளாக ஆறு குறும்படங் களுக்கு தலா ரூ.500, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன என்றும்,

அதன் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் பெரியார் திரை குறும்பட போட்டி அறிவிக்கப் பட்டுள்ளது என்றும் பட்டிய லிட்டு, அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு சங்கர், பழனிகுமார், ஆண்ட்ரூஸ், பார்த்திபன், கலையரசன் ஆகி யோர் பெரிதும் துணை புரிந்தனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.