Showing posts with label விழா. Show all posts
Showing posts with label விழா. Show all posts

Friday, June 22, 2012

That Fired Soul - திரையிடல்


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை 

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம்
23-06-2012 | சனிக்கிழமை | இரவு 7 மணி
பெரியார் திடல், சென்னை-7


ஒடுக்கப்பட்டோர் உரிமைக்குப் போராடும் 
கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
பற்றிய ஆவணப்படம்

“THAT FIRED SOUL”

(தமிழ் - 48 நிமிடங்கள்)


இயக்கம்: அரவிந்த் குமார்
தயாரிப்பு: லெமூரியா பிக்சர்ஸ்

படம் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்குங்கள்!

Wednesday, June 20, 2012

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் பெரியார் திரை விருது 2011


பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து 8.1.2012 அன்று நடத்திய மூன்றாம் ஆண்டு குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திராவிடர் திருநாளின் இரண்டாம்நாள் விழாவில் (16.1.2012) பெரியார் திரை விருதும் பரிசும் வழங்கப்பட்டன. யோசி என்ற குறும்படத்திற்காக இயக்குநர் ஜெ.பாலாவுக்கு பெரியார் திரை 2011 விருது, முதல் பரிசாக ரூ.10000 மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார். க.ராஜீ இயக்கிய இனி ஒரு விதி செய்வோம் இரண்டாம் பரிசாக ரூ.5000ம், ராஜாசேதுபதி இயக்கிய பேரன் மூன்றாம் பரிசாக ரூ. 3000 அசோக்குமார் இயக்கிய துவந்த யுத்தம் சிறப்புப் பரிசாக ரூ.1000 த.மணிமாறன் இயக்கிய ஜீன் 12 ல.ராஜ்குமார் இயக்கிய துண்டு ரெண்டு ஆகிய படங்கள் ஊக்கப் பரிசாக தலா ரூ. 500 பெற்றன. அனைவருக்கும் பரிசு சான்றிதழும் தமிழர் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டன.
முதல்பரிசு பெற்றவருக்கு விடுதலை சந்தாவும், மற்ற அனைவருக்கும் ஓராண்டு உண்மை சந்தாவும் அனைவருக்கும் கழக நூல்களும், ஏடுகளும் வழங்கப்பட்டன. பரிசுத் தொகையை வழங்கிய நன்கொடையாளர்கள் இரா.தமிழ்செல்வன், ரோட்டரி துணை ஆளுநர் தமிழ்ச் செல்வன், சபேசன், கோபால், ராமு, ஜெயவேல், மு.அ.கிரிதரன், கீழ்ச்சுரண்டை ஆறுமுகம் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.

Tuesday, May 8, 2012

உலக ஊடக நாள் கருத்தரங்கம் & தராக்கி திரையிடல்


உலக ஊடக சுதந்திர நாள்
சிறப்புத் திரையிடல் & கருத்தரங்கம்
11.05.2012 | வெள்ளி| மாலை 6:30 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல், சென்னை-7

திரையிடல்:

தராக்கி

இயக்கம் : சோமீதரன்
தயாரிப்பு: லெமூரியா பிக்சர்ஸ்

கருத்தரங்கம்:
கவிஞர் கலி.பூங்குன்றன்
இதழாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்
இதழாளர் கோவி.லெனின்

அனைவரும் வருக!

- பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை

Monday, February 21, 2011

பெரியார் திரை விருது வழங்கும் விழா

அன்புடையீர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய ”பெரியார் திரை குறும்படப்போட்டி 2010”க்கான பரிசளிப்பு விழாவும், “பெரியார் திரை 2010” விருது வழங்கும் விழாவும் சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கின்றன. குறும்பட, ஆவணப்பட, திரைப்பட, ஊடக நண்பர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் & சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

24.02.2011 | வியாழன்
மாலை 6.30 மணி
பெரியார் திடல், சென்னை-7

வரவேற்புரை: மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(அமைப்பாளர், பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை)

தலைமை: மானமிகு கோ.சாமிதுரை
(பொருளாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை:
மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன்
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
மானமிகு சு.அறிவுக்கரசு
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
மானமிகு வீ.குமரேசன்
(பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
மானமிகு வீ.அன்புராஜ்
(தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் கழகம்)

அறிமுகவுரை: மானமிகு தி.பெரியார் சாக்ரடீசு
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

இணைப்புரை: மானமிகு கவிஞர் ராஜசேகர்

வாழ்த்துரை:
மானமிகு வெற்றிமாறன்
(திரைப்பட இயக்குநர், பொல்லாதவன், ஆடுகளம்)
மானமிகு கவி பெரியதம்பி
(இசையமைப்பாளர், முத்துக்கு முத்தாக, அய்வர்)
மானமிகு சத்யா (ஒளிப்பதிவாளர், யுத்தம் செய்)

விருது மற்றும் பரிசுகள் வழங்கிப் பாராட்டுரை:
தமிழர் தலைவர்
மானமிகு கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை:
மானமிகு உடுமலை
____________________________________________________________

பரிசு பெறும் குறும்படங்கள் விழாவில் திரையிடப்படும்.
அனைவரும் வருக!

Wednesday, December 22, 2010

பெரியார் திரை | கடைசி நாள் 27.12.2010 | விரைவீர்!

பெரியார் திரை குறும்படப் போட்டிக்கான வரவேற்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது.
இருப்பினும் போட்டி குறித்த அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து இறுதித் தேதி குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததாலும், வெளிநாடுகளிலிருந்து படங்களை அனுப்ப காலம் தேவை எனப் படைப்பாளிகள் வேண்டிக்கொண்டதாலும் வரும் திங்கள் கிழமை (27.12.2010) வரை இறுதிக் கெடு நீட்டிக்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் & நிபந்தனைகளுக்கு...சுட்டுக!


இவ்வாய்ப்பைத் தமிழ்க் குறும்பட படைப்பாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அமைப்பாளர்,
பெரியார் திரை

Friday, December 10, 2010

3-ஆம் ஆண்டு தொடக்க விழா & ”வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி” திரையிடல்..



பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை 3-ஆம் ஆண்டு தொடக்க விழா

12.12.2010 | ஞாயிறு மாலை சரியாக 5 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

தலைமை: வழக்கறிஞர் கோ.சாமிதுரை (பொருளாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: வீ.குமரேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

வாழ்த்துரை: பாண்டிராஜ் (திரைப்பட இயக்குநர்- ’பசங்க’, ’வம்சம்’)

சிறப்புரை: சு.அறிவுக்கரசு (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

அறிமுகவுரை: தி.பெரியார் சாக்ரடீசு (மாநிலச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம்:
“வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி...”
(ஈழத்தின் முழு வரலாற்றைச் சொல்லும் ஆவணப்படம் - 2 மணி 45 நிமிடங்கள்)

இயக்கம்: சோமீதரன்

தயாரிப்பு: "Save Tamils Visual Media"

அனைவரும் வருக!

Saturday, November 8, 2008

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை தொடக்க விழா


பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை தொடக்க விழா

8-11-2008 சனிக்கிழமை, மாலை 7 மணி,

அன்னை மணியம்மையார் அரங்கம் 

பெரியார் திடல், சென்னை - 7


தலைமையேற்று தொடக்கி வைப்பவர் :  தமிழர் தலைவர் கி.வீரமணி எம்.ஏ.,பி.எல்.,
திரையிடல் : எரியும் நினைவுகள்

யாழ் நூலக எரிப்பு குறித்த ஆவணப்படம்

இயக்கம் : சோமீதரன்

தயாரிப்பு ; நிகரீ

வாழ்த்துரை : பாவலர் அறிவுமதி