Thursday, November 7, 2019

தென் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் பெண் நியமனம்


சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் முதல்முறையாக பெண் பணியா ளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமான நிலைய ஆணையகத்தின் கட்டுப் பாட்டில் தீயணைப்பு துறை செயல் பட்டு வருகிறது. சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் முதல்முறையாக ரம்யா சிறீகண் டன் என்ற பெண் பணியாளர் நிய மிக்கப்பட்டு உள்ளார்.
இவர், விமான நிலைய ஆணையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில் தென்னிந்தியாவில் முதல் பெண் தீயணைப்பு பணியாளராகவும், இந்திய விமான நிலைய ஆணையத்தின் 3ஆவது பெண் பணியா ளராகவும் சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்து உள்ளார். இவர் பணியில் சேருவதற்கு முன்பாக டில்லியில் உள்ள தீயணைப்பு பயிற்சி மய்யத்தில் 4 மாதம் கடும் பயிற்சி மேற்கொண்டார்.
இது குறித்து ரம்யா கூறும்போது, தீயணைப்பு பணி மிகவும் சவால் மிகுந்தது. துணிச்சலுடன் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. வருங்காலத்தில் தீயணைப்பு துறையிலும் அதிக அளவில் பெண்கள் பங்கேற்பார்கள் என்றார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர், முதுநிலை பொறியியல் பட்டதாரி ஆவார். இவர், 2 வயது குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன?

திருவள்ளுவருக்கு காவி ஆடை போர்த்தி நெற்றியிலும், கைகளிலும் திருநீற்றுப் பட்டை போட்டு ஒரு சர்ச்சையை அதிகாரப் பூர்வமாக பா.ஜ.க. தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தியிருக்கிறதே - இதுகுறித்து ஆளும் அண்ணா திமுகவின் நிலைப்பாடு என்ன?
அதிமுகவை நோக்கிய கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை என்ன?
1) திருக்குறள்  எல்லா மதங்களையும் கடந்த அறநெறி நூல் என்பதில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு உடன்பாடு உண்டா இல்லையா?
2) திருக்குறள் ஒரு இந்து மத நூல் என்று சாதிக்க முற்படும் பா.ஜ.க.வின் நிலைப்பாடு பற்றி என்ன கருத்து?
3) திருக்குறளுக்கு திராவிட இயக்கம் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கிறதா?
4) 'தீக்குறளைச் சென்றோதோம்' என்ற ஆண்டாளின் பாசுரத்திற்கு 'தீய திருக்குறளை ஓத மாட்டோம்' என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொன்ன தெல்லாம் தெரியுமா? தெரிந்தால் பதிலடி கொடுத்திருக்க வேண்டாமா?
5) அதிமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சரான மாபா. பாண்டியராஜன் என்பவர் "திருவள்ளுவர் எல்லா மதங்களுக்கும் சொந்தக்காரர் - அதனால் எந்த மதக்காரர்களும் தங்கள் அடையாளத்தை அவர்மீது சாத்தலாம்; திருவள்ளுவர் நாத்திகர் அல்லர்" என்று கூறியுள்ள கருத்து அதிமுகவுக்கு உடன்பாடுதானா? உடன்பாடு இல்லையென்றால் கட்சியின் சார்பில் ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை?
6) திருவள்ளுவர் பெயரில் ஒரு மதச் சர்ச்சையை உண்டாக்கிக் குளிர் காயலாம் என்ற பா.ஜ.க.வின் சூட்சமம் ஆளும் அதிமுக அரசுக்குத் தெரியுமா  - தெரியாதா?
7) தஞ்சையையடுத்த பிள்ளையார்ப்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைமீது சாணி வீசியவர்களைப் பிடிக்க கால தாமதம் ஏன்?
8) உணர்ச்சிப் பூர்வமான மனநிலை மக்கள் மத்தியில் நிலவும் ஒரு சூழ்நிலையில் காவல்துறை நிறைந்திருக்கும் பிள்ளையார்பட்டியில்  இந்து மக்கள் கட்சிக்காரர்கள் படிக் கட்டுகள் மூலம் திருவள்ளுவர் சிலை பீடத்தில் ஏறி அபிஷேகம் செய்ததும், உருத்திராட்ச மாலை அணிவித்ததும் எப்படி? அதனை அனுமதித்தவர்கள் யார்? யார்?
9) அது இருக்கட்டும், இந்த செயலை செய்ததற்காக அவரை மூன்று குற்றப் பிரிவுகளின் அடிப்படையில் கைது செய்து, உடனே விடுவித்தது ஏன்? அரசியல் தலையீடா?
10) மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தொங்கு சதையாக பின்னிப் பிணைந்தநிலையில் பா.ஜ.க.வோ, சங்பரிவாரோ எது செய்தாலும் கண்டு கொள்வதில்லை என்று அதிமுக அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதா?
11) அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், கட்சிக் கொடியிலும் வைத்துள்ள அண்ணா திமுக அண்ணாவின் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு அல்லது வேண்டுமென்றே புறக்கணித்தது வெட்கக் கேடு அல்லவா? சரியானது தானா?
12) தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும், திராவிட இயக்கத்தையும் சங்பரிவார் கொச்சைப்படுத்தும் போது, இழிவுபடுத்திப் பேசும்போது, எழுதும்போது அவற் றைக் கண்டு கொள்ள மறுப்பது ஏன்? பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகள் முற்றிலும் துடைத்து எடுக்கப் பட்ட கட்சியாக அதிமுக உருக்குலைந்து போய் விட்டதா?
13) அய்யா, அண்ணா கொள்கைகள், திராவிட இயக்கக் கோட்பாடுகள் இவை சற்றும் இல்லாமலும் வெறும் பதவிப் பசி கட்சியாக மாறிப் போய் விட்டதா அதிமுக?
14) பா.ஜ.க.வோடு ஒட்டி உறவாடுவதால் சிறுபான்மை யினருக்கு எதிரானது அதிமுக என்ற எண்ணம் பொதுவாக ஏற்பட்டிருப்பதை அதிமுக உணர்ந்துள்ளதா?
15) பகுத்தறிவுச் சிந்தனையோடும், இனமான உணர்வோடும் இருக்கக் கூடிய ஒரே ஒருவர்கூட இல்லாது - அற்றுப் போன கூடாரமாக அஇஅதிமுகவைக் கருதலாமா?
இதுபோன்ற கேள்விகள் இன்னும் இருக்கத்தான் செய் கின்றன. இவற்றைப் பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாத, அக்கறை செலுத்தாத இந்தக் கட்சி அண்ணா பெயரையும், அவரது உருவத்தையும் நீக்கி விடுவதுதானே மரியாதை?
அண்ணா திமுகவில் திராவிட இயக்கவுணர்வும், இனவுணர்வும், பகுத்தறிவுச் சிந்தனையும் உள்ள ஒரே ஒருவர் இருந்தால்கூட, இந்த வினாக்களை கட்சி மட்டத்தில் எழுப் பினால், அத்தகைய ஒருவரை எந்தளவு வேண்டுமானாலும் பாராட்டி மகிழலாம்.
எங்கே பார்ப்போம்?

Monday, November 4, 2019

ஜம்மு, சிறீநகர் மற்றும் லே வானொலி நிலையங்கள் பெயர் மாற்றம்


இந்திய அரசி யலமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி ரத்து செய்தது.
மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிர தேசங்களாகவும் பிரித்தது.
இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர் பான நடவடிக் கைகள் நவ.1 முதல் அமலுக்கு வந்துள் ளன.  கிரிஷ் சந்திராமர்மு மற்றும் ஆர்.கே.மாத்தூர் இருவரும் முறையே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களாக  பதவியேற்றனர்.
இதனை தொடர்ந்து ஜம்மு, சிறீநகர் மற்றும் லே  ஆகிய பகுதிகளில் உள்ள வானொலி நிலையங்களின் பெயர்கள் முறையே ‘ஆல் இந்தியா ரேடியோ-ஜம்மு’, ‘ஆல் இந்தியா ரேடியோ- சிறீநகர்’ மற்றும் ‘ஆல் இந்தியா ரேடியோ- லே’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன் இந்த வானொலி நிலையங்கள் ‘ரேடியோ காஷ்மீர்’ என்ற பெயரில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

"வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்"

படித்த இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்துக்கு விண்ணப் பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்ட தொழில் மய்யம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது.
தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் சேவை மற்றும் வியாபார தொழில்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. அதேபோல் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புபவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
www.msmeonline.tn.gov.in/uyegp  என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதன் நகல், மாற்று சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று, விலைபுள்ளி மற்றும் நிழல்படம் ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மய்யம் திருவண்ணாமலை அலுவலகத்திற்கு நேரில் வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வரும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்கள் பெற 8668147561, 9486494621 ஆகிய தொலைபேசியில் வேலை நாட்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய கின்னஸ் புத்தகத்தில் இந்தியர்கள் 80பேருக்கு இடம்

‘கின்னஸ் உலக சாதனைகள் -2020’ என்ற புதிய புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் பல பிரிவுகளில் புதிய சாதனை படைத்தஇந்தியாவைச் சேர்ந்த 80 பேர் இடம் பெற்றுள்ளனர். நிலான்ஸி படேல் என்ற 16 வயது சிறுமியின் தலைமுடி 5 அடி 7 அங்குலம் நீளம் உள்ளது. டீன் ஏஜ் வயதில் மிக நீளமான முடி கொண்ட பெண்ணாக இவர் இடம் பெற்றுள்ளார்.
நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அமேஜ் என்ற பெண்ணின் உயரம் 24.7 அங்குலம். மிகவும் குள்ளமான பெண்ணாக இவர் இடம் பிடித்துள்ளார். புனேவைச் சேர்ந்த தர் சில்லல் என்பவருக்கு இடது கையில் உள்ள நகம் 909.6 செ.மீ நீளம் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன் என்பவர் 736 வகையான பேப்பர் கப்களை சேர்த்து வைத்துள்ளதற்காக இடம் பிடித்துள்ளார். இதுபோல், பலர் புதிய கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.


குணாதிசயம் சொல்லும் குரோமாசோம்

கருப்பையில் வளரும் சிசுவின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை அறிய கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுவது பலருக்குத் தெரிந்திருக்கும். சில கர்ப்பிணிகளுக்கு மட்டும் மருத்துவர்கள் கேரியோ டைப்  என்னும் சிறப்புப் பரிசோதனையை மேற் கொள்ளச் சொல்கிறார்கள். இது ஏன், எதற்கு, இதை எப்படிச் செய்கிறார்கள்?
மரபியல் நினைவகம் என்பது என்ன?
நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லுக்குள்ளேயும் 23 இணை குரோமோசோம்கள் வீதம் மொத்தம் 46 குரோமோசோம்கள் இருக்கின்றன. இவற்றில் 23 குரோமோசோம்கள் அப்பாவிடமிருந்தும் அடுத்த 23 குரோமோசோம்கள் அம்மாவிட மிருந்தும் வருகின்றன. இந்த 46 குரோமோசோம்களில் எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் நம் பாலினத்தை நிர்ணயிப்பவை. ஒருவருக்கு எக்ஸ் குரோமோசோமும் இருக்கிறது; ஒய் குரோமோசோமும் இருக்கிறது என்றால் அவர் ஆண்; மாறாக, ஒய் குரோமோசோம் இல்லை; இரண்டுமே எக்ஸ் குரோமோசோம்களே என்றால் அவர் பெண்.
இந்த குரோமோசோம்களில்தான் மரபணுக் களைக் கொண்ட டி.என்.ஏ. மூலக்கூறுகள் இருக் கின்றன. இவற்றில் காலம் காலமாய் நம் மரபில் வரும் குணாதிசயங்கள் பொதிந்திருக்கின்றன. ஆகவே, இவற்றை மரபியல் நினைவகம் என்கிறோம். ஒரு குழந்தைக்கு அம்மாவின் கண், அப்பாவின் மூக்கு, தாத்தாவின் உயரம், பாட்டியின் நினை வாற்றல், முப்பாட்டனின் முன்கோபம், முப்பாட்டி யின் முடி என்று எல்லாமே சேர்ந்திருப்பதற்கு இதுதான் காரணம்.
******
நிலவேம்பு கசாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது
* பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பருத்தி பாலை குடிப்பதால் போதிய சத்துக்களை பெறலாம்
* தேங்காய் உடலில் பரவியுள்ள நுண்கிருமி களை அழித்து, உடலை தூய்மை செய்கிறது.
* அல்சர், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் ஆற்றல் பெற்றது கொய்யா பழம்.
* சுண்டைக்காய் நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுத்து பார்வைத் திறனை அதிகரிக்கும், நினைவாற்றல் கூடும்.

மாலி தாக்குதலுக்கு அய்.எஸ். பொறுப்பேற்பு

மாலி நாட் டின் மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத் தில் ராணுவ சாவடியில் கடந்த 1ஆம் தேதி பயங்கர வாதிகள் புகுந்து துப்பாக்கி யால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் நடத்திய அதி பயங்கர தாக்குதல்களில் 53 வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறின.
இந்த தாக்குதலில் பிரான்ஸ் வீரர் ஒருவரும் பலியாகி இருப் பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர் பாக  மாலி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரான்ஸ் ஆயுதப் படைகள் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, மாலிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.