Wednesday, October 23, 2019

காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் பெயராம்!

தெலங்கானாவில் அய்தராபாத் நகரில் கார் ஒன்றின் முகப்பு பகுதியில் பதிவு எண் இருப்பதற்கு பதிலாக, ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரை குறிப்பிடும் வகையில், ஏ.பி. சி.எம். ஜெகன் என ஆங்கில எழுத்துகளால் எழுதப்பட்ட வெள்ளை நிற நம்பர் பிளேட் இருந்தது.
அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் வாகன சோதனையில் ஜீடிமெட்லா காவல்துறையினர் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த வாகனம் ஏசு ரெட்டி என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதும், அதனை ராகேஷ் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காரை ஓட்டிய நபர், சுங்க சாவடி கட்டணம் செலுத்துவது மற்றும் காவல் துறையினர் சோதனையை தவிர்ப்பதற்காக வாகன பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் ஜெகன் பெயரை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் பிஜேபி ஆளும் உத்தரபிரதேசம்: தமிழ்நாட்டுக்கு 7ஆவது இடம்

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களில் 2017ஆ-ம் ஆண்டு நடந்துள்ள குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவர பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
2017ஆ-ம் ஆண்டில் நாடு முழு வதும் 30 லட்சத்து 62 ஆயிரத்து 579 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. 2016இ-ல் இந்த எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 711 ஆக இருந்தது.
2015-ஆம் ஆண்டு இது 29 லட்சத்து 49 ஆயிரத்து 400 ஆகும்.
நாட்டிலேயே பெரிய மாநிலம் என்ற சிறப்பை பெற்றுள்ள உத்தர பிரதேசம்தான், குற்றச்சம்பவங் களிலும் முதல் இடத்தில் உள்ளது.
இந்த மாநிலத்தில் 2017ஆ-ம் ஆண்டில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 84 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இது நாட்டில் 10.1 சதவீதம் ஆகும்.
இங்கு 2016-ஆம் ஆண்டில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 171 குற்ற வழக்குகளும், 2015ஆ-ம் ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரத்து 920 வழக்கு களும் பதிவாகின.
மராட்டிய மாநிலம், அதிக எண் ணிக்கையிலான குற்றச்சம்பவங்கள் நடந்துள்ள 2-ஆவது மாநிலம் என்ற பெயரை பெறுகிறது.
இங்கு 2017-இல் 2 லட்சத்து 88 ஆயிரத்து 879 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 9.4 சதவீதம் ஆகும்.
மத்திய பிரதேசத்துக்கு மூன் றாவது இடம்.
இந்த மாநிலத்தில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 512 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது 8.8 சதவீதம் ஆகும்.
4-ஆவது இடம், கேரள மாநிலத் துக்கும், 5-ஆவது இடம் டில்லிக்கும், 6ஆ-வது இடம் பீகாருக்கும் கிடைத் துள்ளது.
குற்றச்சம்பவங்களின் எண்ணிக் கையில் தமிழ்நாடு 7-ஆவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் 2017-ஆம் ஆண்டு 1 லட்சத்து 78 ஆயிரத்து 836 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இது 5.8 சதவீதம் ஆகும். 2016-ஆம் ஆண்டு, 1 லட்சத்து 79 ஆயிரத்து 896 குற்ற வழக்குகளும், 2015-ஆம் ஆண்டு, 1 லட்சத்து 87 ஆயிரத்து 558 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன.
இந்த வகையில் தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந் துள்ளது.

2020ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை பட்டியல் பாரீர்!


தமிழக அரசு, 2020இல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு, 2015இல் 24 நாட்கள், 2016இல் 23, 2017இல் 22; 2018இல், 23, 2019இல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தது. அடுத்த 2020ஆம் ஆண்டிற்கும் நடப்பு ஆண்டை போலவே, 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும், மூடப்பட வேண்டும். அனைத்து, சனி, ஞாயிற்று கிழமைகளும், விடுமுறை நாட்கள் ஆகும்.

ஜனவரி மாதத்தில் 5 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 4 நாட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 5 நாட்களும், அக்டோபர் மாதத்தில் 4 நாட்களும்  பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவும், கியூபாவும் இணைந்து பல்நோக்கு கதிர்வீச்சு மய்யம் அமைப்பு


இந்தியாவைப் போன்ற தனி சுதந்திர குடியரசு நாடான கியூபாவில், பல்வேறு பணிகளுக்கு பயன் படுத்தும் நோக்கிலான கதிர்வீச்சு மய் யம் ஒன்றை அமைக்க கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இதற்காக நடைபெற்ற நிகழ்வில் பங் கேற்று, கூட்டு ஒப்பந்தத்தில் ரசியா கையொப்பமிட்டது.
கியூபாவின் சார்பில் அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சர் ஜோஸ் ஃபிடல் சந்தனா அவர்களும், ரஷ்யாவின் சார்பில், அந்நாட்டு அணு மின் சக்திக் கழகமான ரொசாட்டம் நிறுவனத்தின் துணை தலைமை இயக்குனர் நிக்கோலே ஸ்பாஸ்கை அவர்களும் இந்த ஒப்பந் தத்தில் கையொப்பமிட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரசிய அணுமின் கழகமான ரொசாட்டம் நிறு வனம் சார்பில் கியூபாவிற்கு வழங்கப் படும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, ரொசாட்டம் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜே.எஸ்.சி. ரொசாட்டம்  ஹெல்த்கேர் வடிவமைத்து உருவாக்கும் பல்நோக்கு கதிர்வீச்சு மய்யம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.
தற்போது அமைக்கப்படும் முதல் மய்யம் வெற்றிகரமாக அமைந்தால், இந்த இரு நாடுகளும் இணைந்து கியூபா வில் மேலும் பல இடங்களில் இது போன்ற மய்யங்களை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது.

கனடா நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ


நிலப் பரப்பில் உலகின் 2ஆவது மிகப்பெரிய நாடாக விளங் கும் கனடாவில் 338 தொகு திகளை கொண்ட நாடாளு மன்றத்துக்கு நேற்று முன் தினம் தேர்தல் நடைபெற்றது.
இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஷீர் தலைமையிலான கன்சர் வேட்டிவ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
இந்த தேர்தலில் எந்த கட் சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் லிப ரல் கட்சி, 157 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்சர் வேட்டிவ் கட்சிக்கு 121 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க 170 இடங் கள் தேவை என்கிற நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 13 நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது.
அந்த வகையில் இந்திய வம்சாவளி சீக்கியரான ஜக் மித் சிங்கின், புதிய ஜனநாயக கட்சி ஆதரவுடன், ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆட்சிய மைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மத்தி யில் அதிகம் வரவேற்பை பெற்ற புதிய ஜனநாயக கட்சி 20 இடங் களை கைப்பற்றி யுள்ளது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்ப தன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து 2ஆவது முறை யாக பிரதமராகிறார். இதற் கிடையே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமூக நீதிக்கு மரண அடி!: பல்கலைக்கழகம், கல்லூரி படிப்பில் சேர உயர்கல்விக்கு ஒரே நுழைவு தேர்வாம்! சமூக நீதிக்கு மரண அடி!: பல்கலைக்கழகம், கல்லூரி படிப்பில் சேர உயர்கல்விக்கு ஒரே நுழைவு தேர்வாம்!

ஒரே தேர்தல், ஒரே உணவுப் பங்கீட்டு அட்டை பாணியில், பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக, புதிய தேசியக் கல்விக் கொள்கை இறுதி வரைவில் பரிந்துரைக்கப்பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையில், கலை அறிவியல் உட்பட அனைத்துபட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமென பரிந்துரைக்கப் பட்டது.
இதற்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
ஆனாலும், பட்டப்படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர, பாடவாரியாக ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவது குறித்து புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவில் பரிந்துரைக்கப்படும். மாணவர்களின் சிரமத்தை போக்க, இத்தேர்வு ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்படும். இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். தற்போது, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் சேர மாணவர்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர். ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வருவதின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி குறையும். புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவு குறித்து 2 லட்சம் பரிந்துரைகள் ஆய்வு செய்யும் பணி முடிந்துள்ளது.
இதனால், இறுதி வரைவு விரை வில் தயாராகி விடும். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. உயர்கல்விக்கான பரிந் துரைகளை ஆய்வு செய்ய பெங்களூ ருவில் ஓர் அலுவலகம் அமைக்கப் பட்டது. பள்ளி கல்விக்காக, சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வாலின் கீழ் ஒரு குழு அறிக்கையை இறுதி செய்தது.
புதிய தேசிய கல்விக் கொள்கை, முற்போக்கான, முற்றிலும் இந்தியாவை மய்யமாக கொண்ட கொள்கையாக இருக்கும் என நம்புகிறேன். இறுதி வரைவுக்கு பிரதமர் மோடியின் ஒப்புதல் கிடைத்ததும், அதை விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது, பொறியியல், வேளாண்,  மருத்துவம், மேலாண்மை உள்ளிட்ட சில பட்டப்படிப்பு களுக்கு மட்டுமே நுழைவுத்தேர்வு இருந்து வருகிறது. கலை, அறிவியல் பட்டப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. ஆனால் புதிய கல்விக் கொள்கையில், கலை, அறிவியல் பட்டப்படிப்புக்கும் ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வரப் படும் என்பது கிராமப்புற மாண வர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கீழடி அகழாய்வில் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு


கீழடி அகழாய்வுக் குழிகளை மூடும்போது, மேம்பட்ட சுடுமண் குழாய் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், இதுவரை, அய்ந்து கட்டங்களாக அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன. முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை, மத்திய தொல் லியல் துறையும், அடுத்த, இரண்டு கட்ட அகழாய்வுகளை,தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண் டன. அய்ந்தாம் கட்ட அகழாய்வு பணிகள், கடந்த வாரத்தில் முடிந்தன. அதனால், அகழாய்வுக் குழிகளை, தார்ப்பாய்களால் மூடி, மண் கொட்டும் பணிகள் நடந்தன.
அப்போது, அகழாய்வுக் குழி ஒன்றின், 52 செ.மீ., ஆழத்தில், 20 செ.மீ., விட்டமுள்ள வாய்ப் பகுதி யுடன் கூடிய, 60 செ.மீ., நீளமுள்ள, சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப் பட்டது.
அது, இரண்டு குழாய் களால் இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொன்றிலும், தலா, 5 விளிம்புகள் இருந்தன. குழாயை உறுதியாக்கி, பாதுகாப்பான தண் ணீரை வழங்கும் வகையில் அமைக் கப்பட்டிருக்கும் இந்த விளிம்புகள், பார்வைக்கு, சுருள் வடிவத்தில் உள்ளன. இக்குழாய் ஒன்றின் வாய்ப் பகுதியில், வடிகட்டும் வகையில், மூன்று துளைகள் இடப்பட் டுள்ளன.
இந்த குழாய்களின் கீழ்ப்பகுதி யிலும், அகழாய்வு செய்யப்பட்டது. அப்போது, பீப்பாய் வடிவிலான, மூன்று, சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு, ஒரே குழாயாக இருந்தது.
அதன் வாய்ப் பகுதியிலும், வடிகட்டி பொருத்தப்பட்டிருந்தது. வடி கட்டப்பட்ட நீர் செல்லும் குழாயின் இறுதிப் பகுதி, இரண் டடுக்கு பானைக்குள் செல்கிறது.
இவ்வாறு, ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும், வெவ் வேறு விதமான இரண்டு சுடுமண் குழாய்களுக்கும், வெவ்வேறு பயன்பாடு இருந்திருக்க வேண்டும். இந்த வடிகால் குழாய்களின் கீழ்ப் பகுதியை அகழாய்வு செய்தபோது, சுடுமண் கூரை ஓடுகள் பதிக்கப்பட்ட தரைப்பகுதி காணப்பட்டது.
இது, தண்ணீரை எளிதாக வடிய வைக்கும் திறந்தவெளி அமைப்பாக இருக்கலாம்.தமிழக அகழாய்வு களில், இதுவரை கிடைக்காத வகையிலான, இந்த வடிகால் அமைப்பு களின் பயன்கள் குறித்து, அடுத்த கட்ட அகழாய்வுகளில் தான் தெரிய வரும். மேலும், அந்த பகுதியை தொடர்ந்து ஆய்வு செய்த போது, கூரை ஓடுகள் அடுக்கப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றின் தொடர்ச்சியில், செங்கல் கட்டடப் பகுதி இருந்தது.அது, இரண்டாம் கட்ட அகழாய்வின் போது கண்டறியப்பட்ட, கட்டடப் பகுதி யின் தொடர்ச்சி.
அதன் தொடர்ச்சி யை, அடுத்த கட்ட அகழாய்வில் தான் கண்டறிய முடியும்.
'கீழடி அய்ந்தாம் கட்ட அகழாய் வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ள, இந்த சுடுமண் குழாய்கள் மற்றும் கட்டடப் பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.'சங்க காலத்தில், வைகை நதிக்கரையில் வாழ்ந்த தமிழர்களின் நீர் மேலாண்மை, கட்டடக்கலை, தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்த, பல்வேறு தகவல்கள் வெளிப் படும்' என, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.
இது, தமிழக வரலாற்றின், புதிய திருப்பங்களுக்கு மிகப்பெரிய சான்றுகளாக இருக்கும் என்பதால், அடுத்தகட்ட அகழாய்வக்காக, வர லாற்று ஆய்வாளர்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.
மதுரை தமிழ் சங்கத்தில்கீழடி தொல்பொருட்கள்
கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை, மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த, தமிழக தொல்லியல் துறை முடிவு செய் துள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், அய்ந்தாம் கட்ட அகழாய்வுப் பணி, சமீபத்தில் நிறைவடைந்தது; அக ழாய்வுக் குழிகள் மூடப்பட்டு விட் டன.
ஆறாம் கட்ட அகழாய்வுக்கான அனுமதியை, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்திடம், தமிழக அரசு கோரியுள்ளது.
இந்நிலையில், கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை, அங்கேயே காட்சிப்படுத்த வேண் டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
அதையேற்ற தமிழக தொல்லியல் துறை, கீழடியில் கிடைத்த தொல் பொருட்களை, பலரும் பார்க்கும் வகையில், மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.
பார்வையாளர்களின் வருகை யை பொறுத்து, கண்காட்சி நடத்தும் நாட்களை முடிவு செய்ய, அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.