பன்னாட்டு குழந்தைகள் திரைப்பட திருவிழா
(Dell-IKFF) என்பது, இவ்வகையினத்தில் முதன் முறையாக, பள்ளிகளில்
திரையிடப்பட்டு கொண்டாடப்படும் ஒரு பன்னாட்டு திரைப்பட திருவிழாவாகும்.
தற்போது மூன்றாவது பதிப்பாக நடைபெறுகின்ற இத்திருவிழா, திரைப்படங்களின்
மேஜிக்கை சிறார்களுக்கு அறிமுகம் செய்யவும், அதன் ஆற்றலைப் பயன்படுத்தி
கற்பிக்கவும, உத்வேகமளிக்கவும் முற்படுகிறது.
IKFF 2019 நிகழ்வானது, 40 நாடுகளில் 2
மில்லியனுக்கும் அதிகமான பள்ளிமாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை
இலக்காக கொண்டு பள்ளிகளில் நடத்தப்படுகின்ற உலகின் மிகப்பெரிய திரைப்பட
திருவிழாவாகும்.
டெல் ஆரம்ப் திட்டத்தின் வழியாக கணினி
கற்றலை ஆசிரியர்களுக்கும், தாய்மார்களுக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான
பள்ளிகளின் மாணவர்களுக்கும் டெல் கொண்டு சென்றிருக்கிறது. தொழில்நுட்ப
கல்வியறிவானது, எதிர்கால தொழில்முறை பணியாளர்கள் குழுவில் இணையவிருக்கின்ற
சிறார்களுக்கு நிச்சயமாக தேவைப்படுகின்ற அடிப்படைஅம்சமாக இருக்கிறது என்ற
பகிரப்படுகின்ற நம்பிக்கையிலிருந்தே IKFF 2019 உடனான எமது கூட்டுவகிப்பு
செயல்பாடு உருவாகியிருக்கிறது, என்று CSB டெல் டெக்னாலஜிஸ், இயக்குனர்
ரீத்துகுப்தாகுறிப்பிட்டுள்ளார்.